எங்க ஊரு.. எங்க நாட்டு காவல்துறை.. கண்ணியமான காவல்துறை!
எங்க ஊரு.. எங்க நாட்டு காவல்துறை.. கண்ணியமான காவல்துறை!
“சோறு தின்று சோறு தின்று, களிமண் சேறாய் போன தமிழன் நான்,
ஏறு பூட்டி உழுதாலும், சொரணை ஏறாத வீரன் நான்!
இங்கே இடமில்லையென்று இனத்தை
எத்தனைபேர் குருதி அறுத்தாலும்,
அதையும் தாங்கும் இதயம் நான்!
அரசியலென்றும், திட்டமென்றும்,
கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும்,
அதையும் ரசிக்கும் நல்ல ரசிகன் நான்!
ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டை வீசும் வள்ளல் நான்!
இன்னும் ஆயிரம் கொடுத்தல்ஓட்டுச்சாவடியை நொறுக்கும் விசுவாசி நான்!
ஒட்டு முடிந்த அடுத்தநாள் ஓட்டாண்டியாகும் ஞானி நான்!
என்னுடைய பொறுமை.. தமிழனின் பெருமை!
என்னுடைய பொறுமை.. ஒரு ஈடில்லா உவமை!
இது எங்கள் தமிழ்நாடு.. ஊழல், கொள்ளை இல்லாத,
சமுதாய ஒழுக்கம் மட்டுமே மூச்சென முழங்கும் ஒரு நாடு!”
நாதியில்லை நாதியில்லை தட்டிக்கேட்க நாதியில்லை!
பேருந்தில், நிறுத்தத்தில், கடற்கரையில், கல்லடியில்..
தனிதடத்தில், மறைவிடத்தில்..
கோவில்கள், பாலங்கள், பூங்காக்கள், புதர்கொடிகள்..
எனநீளும் எல்லையில்லா எரிச்சல்களை எச்சில்களை,
காம கருமங்களை, நாய் காதல்களை,
வேடிக்கை தவிர்த்து, எட்டி உதைத்து , காரி உமிழ்ந்து, முடி அறுக்க,
எனக்குத்தெரிந்து எங்கும் இதுவரை நாதியில்லை !