மனிதநேயம்.. வாழ்ந்துகொண்டிருக்கிறது. எப்படி தெரியுமா?
மேலோட்டமா பார்த்த இது ஒரு சாதாரண செய்தி. அவ்ளோதான்.. எல்லோரும் அடுத்து அவங்கவங்க வேலைய பார்த்துட்டு போய்டலாம். இப்படிதான் வாழ்ந்திட்டு இருக்கு மனிதநேயம்னு தனியா கட்டுரைபோட்டு நமக்கு விளக்கவேண்டிய தேவை இல்ல. நாம்தான் பாக்கறோமே! தினம் தினம் ரோட்டோரத்தில, கோவில் வாசல்ல, bus stand லனு..
நம்மல்ல எத்தனைபேர் அவங்க பக்கத்துல உட்கார்ந்து உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்ருபோம்? இல்ல, அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு, ஏன் இவங்க இப்படி மனிதம் கொல்லப்பட்ட நிலையில இருக்காங்கனு ஒரு நிமிஷம் யோசிச்சு பார்க்கிறோமா?
“கீழ பணம் கிடந்த எடுப்பீங்களா?” னு இந்தியால ஒரு பெரிய்ய்யய.. VIP கிட்ட கேக்க அவர் சொல்றாரு, குனிஞ்சு எடுக்கற time ல நான் பலகோடி சம்பதிசிடுவேன்னு.. அவர் இதுவரைக்கும் சம்பாதிச்ச மக்கள் பணம் பத்தாது போல.. இதுபோல மனிதம், மனிதநேயம் பத்தி பேசும்போது மட்டும் ஏன் அறிவுபூர்வமான பதில்கள் வர்றது இல்ல? இவங்க மனசுல பணத்தை தவிர வேற இருந்தாதான வரும்.
இந்த வீடியோல மனச கிழித்துப்போட்ட விஷயம்.. மனிதநேயத்தைபற்றி வாய்கிழிய பேசும் இந்த மீடியவுக்காக படம்பிடிச்சவர், அவர்கூட இருந்த assistants இவங்க எல்லாம் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க? ஓ! அவங்க channel ratings காக பாடுபட்டுட்டு இருந்திருப்பாங்க இல்ல.
யாரோ ஒரு பெண் ஒரு trust la இருந்து வந்து அவங்கள மீட்கும் வரைக்கும் இந்த மாண்புமிகு மக்களும், மீடியாவும் வேடிக்கை பார்த்துட்டு இருந்துருக்காங்க.. நடைமுறைவாதிகள கேட்டோம்னா, இது எல்லாம் சகஜமா நடக்கறதுதனணு சொல்றாங்க.
நான், என் குடும்பம், என் சுயநலம்.. அப்படின்றதையெல்லம் தாண்டி ஒருமனிதனா நாம கொஞ்சம் யோசிச்சு பாக்கலாமே! இவங்க எல்லாம் உண்மையா மனுஷங்கதானா? மனித இனம் எதை நோக்கி போயிட்டு இருக்கு.. மனிதத்தை விட்டுட்டு நாமெல்லாம் எதை தேடி போயிட்டு இருக்கோம்?
சாமான்யனா கேக்கறேன் .ஒரு விலங்குகூட தன இனம் இல்லாத மற்ற இனத்த சேர்ந்த விலங்குகுட்டிகள தன் தாய்பால கொடுத்து, விலங்கோட வரையறைன்னு மனிதன் கோட்பாடு எழுதி வச்சிருக்க விலங்குப்பண்பையே உடைச்சு எரியற விஷயத்தை எத்தனை media ல பாக்கறோம்.. அந்த நாய், பூனைகிட்ட இருக்கிற மனிதம்கூட மனிதர்கள்கிட்ட அதிசயமா இருக்கு.
மனிதன் அறிவியலிலும், பொருளாதார வளர்ச்சியிலும் எவ்வளவு சாதனை படைக்கிறான்னு, மனிதர்களுக்கு மீறிய அறிவும், விஞ்ஞானமும் எந்த species or alien கிட்டயும் இல்லன்னு மார்தட்டும் ஞானிகள், அறிவு ஜீவிகளுக்கெல்லாம் ஏன் மனிதம் கண்ணிலேயே தெரியமட்டேன்னு மறஞ்சு போயிடுது? ஏன் மனிதநேயத்தைமட்டும் காத்துல பறக்க விடறாங்க?
மனிதநேயம்னு ஒன்னு மனசுக்குள்ள இருந்தா மட்டும்தான மனிதன் மனிதனா இருக்கிறான்னு சொல்ல முடியும்.
இங்க மனிதநேயம்னா என்னனு பல பேருக்கு அர்த்தமே தெரியாம இருக்கும்போது எங்க மனிதமும் மனிதநேயமும் உயிரோட வாழும்? குப்பைமேட்டில்தான் கிடக்கும்.
ஈழத்துமக்கள கொன்னு குவிச்ச ராஜபக்ஷேவுக்கு எதிரா தமிழ்நடிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினப்ப, தன் கையெழுத்த பதிய மறுத்த நடிகர் திரு.விஜய் திருமகனுக்கு “உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா” னு பாட்டு எதுக்கு.. மனிதநேயத்தை பறைசாற்றவா? அவர ஏன் திட்டனும்?
நாம.. ? ஈழத்துல தமிழ் மக்கள் கொல்லப்படும்போது மனசுல கொதிச்ச அந்த வெறி, இன உணர்வு எல்லாம் பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் நடந்துட்டு இருக்கும்போது எங்க போச்சு எல்லோருக்கும்?
அமெரிக்கா, ஈராக்-ல மக்களை கொன்று குவிக்கும்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இங்க இருக்க அமைப்புகள் ஏன் போராட்டம் நடத்தாம விட்டாங்க? அப்போ இந்த சினிமா நடிகர் நடிகர்களுக்கெல்லாம் கண்ணு தெரியாம, காது கேக்காம போச்சா? அப்போ ஏன் உண்ணாவிரதத்தை அந்த மக்களுக்காக, குழந்தைகளுக்காக நாம் முன்னெடுக்கல?
எங்கயோ ஒருநாடு. ஏதோ ஒரு இன மக்கள்ன்னு நமக்கே தெரியாத ஒரு இன உணர்வு .. ரொம்ப நல்ல உணர்வு.
மனிதன் எதிர்காலத்தில் எப்படி மனிதனா இருக்கபோறான்??????!!!!!!
/டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
பிகாரைச் சேர்ந்த தினேஷ் குமார் யாதவ், டெல்லி ராஜ்காட்டில் 80 சதவீத தீக்காயங்களுடன் கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவருக்கு மனைவி, 5 குழந்தைகள், மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். டெல்லியில் வாட்ச் மெக்கானிக்காக தினேஷ் வேலைபார்த்து வந்தார்.
ராம்லீலா மைதானத்தில் போலீசார்-ஹசாரே ஆதரவாளர்கள் மோதல்:
இந் நிலையில் ஹசாரே கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் அங்கு பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
அதிகாலை 3 மணியளவில் ராம்லீலா மைதானத்தின் விஐபி நுழைவாயில் கதவுகளை அந்த இளைஞர்கள் திறக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை உள்ளே விட மறுக்கவே, அவர்களைத் தாக்கினர்.
இதையடுத்து விரைந்து வந்த கூடுதல் போலீசார் அவர்களை ஒடுக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந் நிலையில் அந்த வாலிபர்கள் அன்னாவின் ஆதரவாளர்கள் இல்லை என்றும், கலாட்டா செய்ய வந்த கும்பல் என்றும், ஆனால், அவர்களை ஹசாரே ஆதரவாளர்கள் என்று கூறி போலீசார் திசை திருப்ப முயல்வதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார்.
ஹசாரே கைது விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:
இதற்கிடையே ஆகஸ்ட் 16ம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஹசாரே கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஹசாரேவின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில்சிபல் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று அவர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. /
vaikaitamil.wordpress.com
ஹசாரே நடத்தும் ‘அமைதி’ போராட்டத்தில், தீக்குளித்து உயிரிழந்த ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட்டுவிட்டு, அவர் கலவர பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்கைகளை பேசவைப்பது அவரின் ‘போராட்ட வீரியத்தைதான்’ காட்டுகிறது.
இறந்த பீகாரை சேர்ந்தவருக்கு மனைவி, 5 குழந்தைகள், மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர் மற்றும் அவர் ஒரு வாட்ச் மெக்கானிக் என்பது அவரின் குடும்ப வறுமையை மேம்போக்காக காட்டுகிறது. எல்லாம் மீடியாக்கள் கைகளில்தான் உள்ளது.
மீடியாக்கள் அடையாளம் காட்டியபடி அவர் ஒருவேளை ஹசரேவுக்காக தீக்குளிந்து உயிரிழந்திருந்தால் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவ்வளவுதான் என்பது வேதனையான விஷயம்.
ஒருவன் உணர்வுரீதியாக ஒரு விசயத்தில் தீவிரஈடுபாடு கட்டும்போது இதுபோன்று கலவரம் வெடிப்பது இயல்புதான்.. அதனை, கடந்த சில மாதங்களாக மட்டுமே ஊழலை கண்டுகொண்ட ‘பி ஜெ பி ‘ அதரவுகொண்ட அண்ணா ஹசாரே போல ‘பெரும் பெரும்‘ தலைவர்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டு அமைதிப்படுத்துவதுதான் பொறுப்பான முறை.
அதனைவிடுத்து “அவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்னு..”காமடியன் show ஓட்றத போல, அவர்கள் எங்க ஆதரவாளர்கள் இல்லனு நழுவினா.. இவர் ஆதரவாளர்கள்னு உணர்வான இளைஞர்களை தவிர்த்து யாரை சொல்றருனு புரியல. (இளைஞர்கள் இல்லாம ஒருநாள்கூட இவர்னால போராட்டம் நடத்தமுடியாதுனு இப்படி நம்ம தலைக்கு தெரியாம போச்சு!)
ஒருவேளை ‘பி ஜெ பி’ & ‘ஆர் எஸ் எஸ்’ தொண்டர்களை சொல்வாரோ.?
இதுபோல விசயங்களில் மாட்டிக்கொள்ளகூடது என்று ஹசாரேவும் அவரின் ‘கைகளும்’ நழுவி ஓடும்போதே இந்த போராட்டம் அண்ணா ஹசாரேவால் நடத்தப்படவில்லை. ஒரு பெரிய ‘பின்புலத்தின்’ இயக்கத்தில் நாட்டுமக்களின் ஆதரவை நம்பியும், ஹசாரே ‘ஆதரவாளர்களை‘ நம்பியும் நடத்தப்படுவது புரிகிறது!
எப்படியோ! எல்லா கட்சித்தலைவர்களும், பெரியவாக்களும் ஊழலை கண்டும் காணாம, தான் சம்பதிக்கறதுலையே குறியா இருக்கும்போது.. அரசியல் ஆதாயமோ, இல்லை மக்கள் சேவையோ.. இந்த ‘பெரும்தலை’வராவது போராட்டத்தை முன்னேடுக்கத்துணிந்தாரே..! நல்லது நடந்தால் சரிதான்.