மழைக்கும் ம(ன)ணமுண்டு!

மழையைப் பற்றிக் கவிதை?
மழையைவிட கவிதை?
மாற்றமே இல்லை. மழைதான்!

கதிரவனும் சந்திரனும் வரும் மாலை,
அமைதியாய் முத்தமிடும் அந்திவேளை,
கொஞ்சமாய் கொட்டிச் செல்லும் மழை சாரல்.
எனக்கது தெரிகிறது கவிதையாய்!

வரைந்துவிட்ட வானவில்லின் வரிகளும் ,
திறந்துவிட்ட வாசல் வரும் துளிகளும்
தீண்டிக்கொள்ளும் புள்ளியில்
எனக்கது தெரிகிறது கவிதையாய்!


என்றுமே ஒலித்திருக்கும் கீசல்லொலி
இன்றுமட்டும் என் வீட்டு வாசல்கதவில்
மூச்சில்லாமல் முடிந்திருக்கும் மர்மத்தில்
மொத்தமாய்  தெரிகிறது கவிதையாய்!

கொஞ்சமாய் வந்து கோடையை வெந்து,
நெஞ்சமாய் நீளும் மண்வாடையில், இன்றுமட்டும்
எனக்கது தெரிகிறது நீங்காத கவிதையாய்!

வழிபார்த்து நடக்கையில்
வீதியெங்கும் ஜொலித்திருக்கும் மேமாதப் பூக்களின்
நீங்காத நீர் தழுவலில், இன்றுமட்டும்
எனக்கது தெரிகிறது கவிதையாய்!


வயதுவந்த பூக்கருதில்  வருடுகின்ற கல்வனாய்,
வடிகின்ற ஒரு துளியில் என்றுமில்லை.
இன்றுமட்டும் எனக்கது தெரிகிறது கவிதையாய்!
இல்லை இல்லை. என்றுமே இல்லை!
இதைவிட எங்குமே இல்லை!


எப்போடியோ தோற்றுவிடும் மட்டைபந்தின்

இறுதியில் இடைமறிக்கும் இதைவிட
என்றுமே எதுவுமே எனக்கு தெரிந்ததில்லை கவிதையாய்!