உலகம்… சுழலும்…

http://chennaidailyfoto.files.wordpress.com/2008/10/m_0020-091.jpg

பூஜை என்றான், புணஷ்காரமென்றான்.

எங்கெங்கோ கைவைத்த குருக்கள்

எத்தனைபேருக்கு அளித்தானோ

அந்த கிடைக்கரிய பிரசாதத்தை!

வெளியில் கையேந்தும்

வெகுளிகள் பல இருக்க,

கைபட்டால் தீட்டென்று

அடிதூரம் ஓடும்

ஆன்மீகவாதி,

அம்மணப்பிரசாதம் உண்டிருப்பான்!

குடுமையும், நெற்றிக் குங்குமமும்

குருக்களின் அவதாரம்.

அடியோடு அம்பலத்தில்

அவனின் அரிதாரம்.

கைபடும் குற்றமாய்

ஈழனைப் பார்த்தவன்,

ஒரு எச்சத்தின் அருவெருப்பாய்

ஈழனால் பார்க்கப் படுகிறான்

என்னூர் தெருக்களில்.

ஹா ஹா ஹா. உலகம் சுழலும்.

Advertisements

நம்மூரு சொரணை..

https://i2.wp.com/newsimg.bbc.co.uk/media/images/44120000/jpg/_44120437_indiapoorap.203.jpg

அகிம்சையைப் படிக்க

காந்திக்கே 25 வருஷம் ஆச்சாம்.

ஆனால், ஊழல் மட்டும்

தெரியுது நாய்களுக்கு,

வந்த உடனே அரசியலில்.

—————————————

எச்சில் நனைந்த வீதிகளில்

விழுகிறான் அரசியல்வாதி;

வாக்குகுத்தும் கைகளை மறந்து

சானிமிதித்த கால்களில்.

தொடைக்கச் சொல்லிப் பாரு.

நக்கியே விடும் நாயி.

—————————————

கைக்குப் பணமிருக்கு.

காலுக்குத்தான் சொல்லித்தரனும்

நடக்க, வாக்குச் சாவடிக்கு;

உனக்கு பணம் கொடுத்து,

மீத மக்களையும் சாவடிக்க.

—————————————

மானம்போன மனிதன் நீயும்,

பணத்துக்காய் விக்கிறாய்

ஓட்டதை.

கடைசியில் நிக்கிறாய்

ஒட்டாண்டியாய்.

—————————————

உனக்கு புளுத்தரிசி

சில கிலோ.

அவனுக்கோ பளுத்தபணம்

பல கிலோ.

—————————————

சட்டமன்றமா, நாடாளுமன்றமோ

என்ன கெரகமொன்னு

அடுத்த தேர்தலைப் பார்த்திருக்கான்

அம்சா புருஷன்.

ஒருநாள் பணத்துக்கு ஆசைப்பட்டு

நித்தம் பொணமாய் போனான்

பசியோடு.

இன்னும் புத்திவல்ல.

நாடு முன்னேறும்…

—————————————

இப்படியே போனா

அரசியலே பொழப்பானவந்தான்

பொழைக்க முடியும்.

மத்தவனெல்லாம்

மாத்துகிரகம் பாத்துக்க

வேண்டியதுதான்.

—————————————

ம்ம்ம்ம்… நல்லா இருக்க.,  நம்மூரு அரசியல்.

இரவில் ஒரு இரவு..

https://i1.wp.com/fineartamerica.com/images-medium/bus-in-black-and-white-robert-harris.jpg

அந்த இரவின் போர்வையில்

இயங்கும் பேருந்தின் இருக்கையில்

இறுகும் இரு கரங்கள்.

————————————————–

புரிதலா இது சரிதலா என்று தெரியாமலே

இயங்குகிறது பேருந்தும்,

தன் பயணத்தின் இறுதியை நோக்கி.

————————————————–

எனக்கு உறக்கமில்லை,

அவர்களுக்கு இரக்கமில்லை.

மார்கழிப் பொழுதின் தீயுறையும் குளிரில்

அவர்களின் இறுக்கம்

கால்களை குறுக்கவைக்கிறது.

————————————————–

கட்டிப்போட்ட கண்கள் இரண்டையும்

கட்டியணைத்திருக்கும் கரங்கள்,

கைபிடித்து இழுத்துச்செல்கின்றன.

————————————————–

எனக்குள் ஒரு மிருகம் இருப்பதை

அன்றே உணர்ந்திருந்தேன்.

உணவிட மறந்ததைமட்டும்

இன்றுதான் உணர்கிறேன்.

உணவிடபட்ட மிருகங்களும்

எச்சில் நனைத்தே காத்திருக்கின்றன.

————————————————–

காதலில் தோற்று பல வருடங்கள்.

இன்றுதான்

கண்மூடித் திட்டிகொண்டிருக்கிறேன்

காதலியை.

நாங்கள் பல பயணங்களை

முடிக்க மறந்துவிட்டோம்.

————————————————–

காதல்.

காதலர்களுக்கு எப்படியோ,

மற்றவர்களுக்கு நிச்சயமது

ஒவ்வொரு நிமிடங்களின் சாதல்.

————————————————–

இன்னுமே இயக்கத்தில் பேருந்து.

முடிந்துவிட்ட முடிவு!

https://i2.wp.com/www.gerryriskin.com/so_sad_girl.jpg
சாரலும், தூரலும் சலிக்காமல் ,

இன்னும் இன்னும் வெந்துதான் போகிறது

இதயத்தின் நான்கு அறையும்!

கொஞ்சமாய் கொஞ்சிக்கொண்ட

என் குறும்புகள் அத்தனையும்

பஞ்சத்தில் தஞ்சம் தேடும்

பட்டுப்பூச்சியின்  பால்யமாய்,

நெஞ்சத்தில் கொல்லிவைத்து

நித்தமும் எரிகிறது!

இறுகிப்போகும் இரவுகளையும்,

உருகிப்போகும் கனவுகளையும்

எதிர்பார்த்த இவளுக்கு,

கருகிப்போன கட்டிலும்

கசங்கிப்போன தலையணையும்

காலம் கடந்த காமுகனுடன்

கடைமையாய் கடந்து போகின்றன!

சொல்லவும் தேவை இல்லை,

சொல்லியும்  புரிவதில்லை!

சொல்லாமல்  சொல்லி அழ

கோவில்தான் என் குடிவீடாய்!

என்றேனும் இளைப்பாற,

என் கழிவறைதான் கருவறையாய்!

அன்றும் நினைக்கவில்லை,

இன்றும் நினைக்கவில்லை,

என்றுமே நினைக்கவில்லை!

வந்த வசந்தமழை இந்த கன்னிக்கு மட்டும்

கண்ணில் மையம்கொண்ட கனமழை ஆகுமென!

பொறுத்திருந்து காத்திருக்கிறேன்,

மூலவனும் முடிக்காவிட்டால்,

முடிந்துவிட்ட முடிவுக்கு

முடிவுரையை முடித்துவிட.

அடுப்பங்கரையிலோ, ஆற்றங்கரையிலோ!!