ஒரு மூலையில் நான்..

https://i0.wp.com/www.indorato.com/images/small_images/more_images/00009s.jpg

அந்த உணவகத்தின் ஒரு மூலையில்

ஓரமாய் அமர்ந்து

உன் புன்னகை உதிர்த்த பொற்ச்சிறகுகளை

பொறுக்கிவைத்துக் கொண்டிருக்கிறேன்.


நீ வழித்தடம் நடக்கையில், மூலைகளில் ஒழிந்தே

உன் பச்சிளம் பாதம் தோன்றும்

பட்டாம்பூச்சிகளை

ஸ்பரிசித்துக் கொண்டிருக்கிறேன்.


இருக்கையில் நீ இருக்கையில்

அந்தப் பேருந்தின்

மூலைதேடியே ஓடுகிறேன் நான்,

நீ அறியாத என் உயிர்கசியும் நிமிடங்களுக்காக.


வகுப்பறைகளில் நீ வாசம்கொள்ளும்போது

நான் ஒளிந்து உனைப்பார்க்கும்

அந்த மூலைத் தூணுக்கே கொட்டப்படுகிறது

என் பாசமெல்லாம் கட்டியானைப்புகளில்.


மூலைதேடியே ஓடிக் கொண்டிருக்கிறேன்!

உன் இதயத்தின்

ஒரு மூலையிலாவது இடம் கிடைக்குமென!

என் கவிதையுடன் ஒரு நொடி..

http://stillanightowl.files.wordpress.com/2008/12/pain.jpg

நான் காத்திருந்து

கவிதைகளைப் படைப்பதில்லை.

படைக்கையில்

அது கவிதையாய் இருப்பதுமில்லை.

காகிதம் கைபடும் நேரம்,

கட்டுப்பாடு மறந்து

கிறுக்கிவிடுகிறேன்,

கிறுக்கனாகிறேன்!


அடுத்த உருவை

அச்சேற்ற நினைக்கையில்,

எங்கோ அழைத்த வேலை

தை மிச்சமாக்கி,

விம்மிய எண்ணங்களை

வீணான எச்சமாக்கி விடுகிறது.


இரசிப்பார்க்களென்று எதிர்பார்க்கும்

என்னுயிர் தைத்த வரிகளெல்லாம்,

கருத்துக்கூற ஆளில்லாமல்

கருவருந்தே போகிறது..


ஒவ்வொருமுறையும்

என் முத்துக்களைக் கொட்டிப் பார்கிறேன்.

பொறுக்க ஆளில்லாமல்,

நானே குனிந்து பொருக்கி

முதுகெலும்புகள் ஒடிந்து கொள்கிறேன்.


வலிகளை விளக்க,

கனவுக்குள்ளாய்

காடு மேடு கல் முள்ளென்று

நான் ஏறி நடந்த வலியை விட,

வழி இல்லாமல் தவிக்கும் கவியொன்றால்

இன்னுமே

உயிர் தைத்த வலி அதிகமாகிறது


கடவுளொன்று இருந்தால்,

எனக்கு ஒருவரம் மட்டும் போதும்.

யாரும் கவிபடித்து அதன் கருப்புரிந்து

என் வலி விலகும் ஒரு நொடியில்,

‘என் வாழ்க்கை முடிய வேண்டும்.’

நான் காத்திருந்து
கவிதைகளைப் படைப்பதில்லை.
படைக்கையில்
கவிதை இதென்று நினைப்பதுமில்லை.
காகிதக் கைபடும் நேரம்
கட்டுப்பாடும் தெரிவதில்லை.
கிறுக்கிவிடுகிறேன் கிறுக்கனாகிறேன்!

அடுத்த உருவை
அச்ச்சேற்ற நினைக்கையில்,
எங்கோ அழைக்கும் வேலையதை
மிச்சமாக்கி விடுகிறது.
வீணான எச்சமாக்கி விடுகிறது.

இரசிப்பார்க்களென்று எதிர்பார்க்கும்
என் இதமான வரிகளெல்லாம்,
கருத்துக்கூற ஆளில்லாமல்
கருவருந்து போகிறது.

ஒவ்வொருமுறையும்
என் முத்துக்களை கொட்டிப் பார்கிறேன்,
பொறுக்கத்தான் ஆளில்லை.
ஆழ்கடலில் மூழ்கியிருந்தாவ்தால்
மதிப்பதற்க்கோ?

வலி விளக்க நான் கனவுக்குள்,
காடு மேடு கல் முள்ளென்று
ஏறி நடந்த வலியை விட
வழி இல்லாத இது
இன்னும்தான் வலிக்கிறது.

எனக்கு ஒருவாரம் மட்டும் போதும்.
வழி விலகும் ஒரு நொடியில்
இறந்துவிட வேண்டும் நான்.