அந்த உணவகத்தின் ஒரு மூலையில்
ஓரமாய் அமர்ந்து
உன் புன்னகை உதிர்த்த பொற்ச்சிறகுகளை
பொறுக்கிவைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ வழித்தடம் நடக்கையில், மூலைகளில் ஒழிந்தே
உன் பச்சிளம் பாதம் தோன்றும்
பட்டாம்பூச்சிகளை
ஸ்பரிசித்துக் கொண்டிருக்கிறேன்.
இருக்கையில் நீ இருக்கையில்
அந்தப் பேருந்தின்
மூலைதேடியே ஓடுகிறேன் நான்,
நீ அறியாத என் உயிர்கசியும் நிமிடங்களுக்காக.
வகுப்பறைகளில் நீ வாசம்கொள்ளும்போது
நான் ஒளிந்து உனைப்பார்க்கும்
அந்த மூலைத் தூணுக்கே கொட்டப்படுகிறது
என் பாசமெல்லாம் கட்டியானைப்புகளில்.
மூலைதேடியே ஓடிக் கொண்டிருக்கிறேன்!
உன் இதயத்தின்
ஒரு மூலையிலாவது இடம் கிடைக்குமென!