சொர்க்கத்தின் வாசலில் ஒருநாள்! – பகுதி 1.

https://i0.wp.com/image.lowriderarte.com/f/10535825+w750+st0/lrap_0809_37_z+lowrider_arte_black_and_white_art+man_with_wings.jpg

அது ஒரு அழகிய நிமிடங்களின் நகர்வு… இதுவரை இல்லாததாய்  இறக்கைகள் முளைத்துப்

பறந்து கொண்டிருந்தேன் நான்… என் வாழ்வில் முதன் முதலில் இப்படியொரு அனுபவம்…

இருந்தாலும் என் கண்களில் மட்டும் ஏதோ ஒரு கண்ணீரின் ஈரப்பசை அப்படியே இஞ்சி

அரித்துக் கொண்டிருந்தது..

என்னுடையது என்ற அனைத்தும் அந்த நிமிடத்தில் கேட்பாரற்று அடங்கிப் போனதாய்
உணர்ந்தேன்.  என் மனதின் குமுறல்கள் பாரம் தாங்காது கண்களின் வழியே ஒரு
வற்றிப்போன அருவிநீராக வழிந்துகொண்டிருந்தது…
துன்பத்திற்கு ஏது  வடிவம்?
பல வருடங்களாக என்னை காதல் என்ற பெயரில் சித்திரவதை செய்யும் என் கவலைகள்
இன்று ஆயிரமடங்கில்  துன்புறுத்தின.
என்னுள் யாரோ என் மனதை ஈட்டிகளாலும்  கூரிய அம்புகளாலும் தாக்கி வதைப்பதுபோல
வாய்விட்டு கூறமுடியாத, இதயத்தால் தாங்க இயலாத ஒரு மரண வலி.. எவரும்
அனுபவிக்க கூடாத வலி..  காலையில்தான் நண்பன் வந்து கூறினான்.
ராகவி. ஒரு அற்ப காரணத்திற்க்காக என்னை தூக்கி எறிந்துவிட்டதாய் கூறியிருந்தாள்.
” எல்லோரும் தயவு செஞ்சு வெளிய போங்க.. இங்க நின்னு இருக்கற மீதி உசுரையும்
எடுத்தராதிங்க.. போயிடுங்க..” என்று குரல் தெறிக்க கத்தி வலுக்கட்டாயமாக
அனைவரையும் வெளியேதள்ளி கதவைமூடினேன்.

எந்த மனம்தான் தோல்வியைத் தாங்கும் வல்லமை படைத்தது..? துன்பம் மேலோங்கும்

போதுதான் மனதின் ரூபத்தை அறிய முடிகிறது.

என் மனதை வருத்திக்கொள்வதாய் என் நெஞ்சை நானே பலமுறை பலம்கொண்டு அடித்த

வலிகூட  எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை…என்னுள் இருந்த ஆழமான ரணம்..,

மரண வேதனையை செரிந்துகொண்டிருந்தது. நான் மெல்ல மெல்ல மாறிக்

கொண்டிருந்தேன்!

என் முகத்தை கண்ணாடியில் பார்கையில் எனக்குள்ளேயே என்மீதான வெறுப்புகள் பீரிட்ட

ஆரம்பித்தது. என் முகம் காட்டிய கண்ணாடிகளை ஒன்றுவிடாமல் உடைத்து தள்ளினேன்..

என் இதயம் ஓடைந்தது போல் சிதறல்கள் தெறித்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை

மறக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடித்தது போல் உடைக்க இன்னும் ஏதாவது கிடைக்குமா

என்ற ஒரு வெறி என்னோடு கலந்து அர்த்தமற்ற சிரிப்புடன் பொருட்களை

தேடிக்கொண்டிருந்தன என் கண்கள்..  உடைத்துத் தள்ளினேன். கண்ணில்

பட்டதையெல்லாம் உடைத்துத் தள்ளினேன். அருகில் இருந்த புத்தக பேழையையும்

முழுபலம் கொண்டு கீழே தள்ளினேன். சட்டைகளை கிழித்தெறிந்தேன். என்னை முழுதாக

இழந்திருந்தேன். அனைத்தையும் உடைத்து, வேர்வை சொட்ட சொட்ட.. பலமான

மூச்சுக்கற்றுகளுடன் மண்டியிட்டு அமர்ந்தேன். கைகள் ஒப்புகளை தேடின. விழுந்து கிடந்த

பேழையின் மேல் ஒரு கைகொண்டு பிடித்தேன். உடைந்த ஒருதுண்டு இன்னும் சில

துண்டுகள் ஆயின. இடையே தான் குருதி நனைத்த கவிதை வரிகளுடன் நூலாக

அதிலிருந்து பாரதி வந்து விழுந்தான்.. அதனுள் இருந்த ராகவியின் படமும் வந்து விழுந்தது..

என் ராகவிக்கு பாரதி மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கும் பாரதியை  பிடிக்கும்.

“ராகவி. என் நிலையை நிழலாக வந்து எட்டி பார்க்கிறாள் போல.. கள்ளி.. பாரதி நீதான்

கூட்டிவந்தாயா உன் தோழியை? நான் உயிரோடுதான் இருக்கிறேன். பார்த்துக்கொள்” என்று

சொல்லியபடியே இரு கைகளையும் மடித்து புஜபலம் பொருந்தியவன் போல் நின்று

காட்டிக்கொண்டிருந்தேன் பாரதியிடம்.

ஏதோ எண்ணம் மீண்டும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. கண்கள் இடம் வலம் சென்று வந்தது.
“கடவுள்… கடவுள்… ” என முனங்க ஆரம்பித்து… வெறிபிடித்ததாய்  ” அவன் இல்லை. கடவுள்
இல்லவே  இல்லை.. !! அவன் பொய்.. அவனும் என்னை ஏமாற்றி விட்டான்.. கடவுள் வெறும்
கல்லும் மண்ணும்… அவன் எதுவும் செய்ய லாயக்கற்றவன்”  என என் குரல்வளைநாண்
கிழிய கத்தி நாவடங்கும்போது, என் கரங்கள் பூஜை அறையில் இருக்கும் சிலைகளை
உடைக்க ஆரம்பித்திருந்தது…
அப்போதுதான் விழுந்தது, அதுவரை என்னை அமைதியாய் சகித்துக் கொண்டிருந்த அந்த
அரை.. என்னைக் காண பொறுக்காத என் தந்தை எனக்கு கொடுத்த மருந்து… மருந்து கொஞ்சமாக
வேலை செய்தது.. ஓரளவு நிதானத்திற்கு  வந்தேன்.

அழுகை விம்மளாக மாறியது..

” ராகவி.. என்னை இசைக்க வந்தவள்… என்னை மறந்து விட்டாளாம்.. ஒரு நொடியில்

என்னை தூக்கி  எறிந்து விட்டாளாம்  பா!!! எல்லாம் முடிந்து விட்டது..”

ஏதேனும் ஒரு வார்த்தையில் கூறிவிட்டால், என் தந்தையை உடனே இருக்க கட்டிப்பிடித்து

அழனும் போல இருந்தது.. ஆனால், எந்த ஆறுதல் வார்த்தைகளும் வராமல் கண்களில் நீர்

மட்டுமே வழிந்தது அப்பாவுக்கு…

“அவளாகவே வந்தாள்… என் தேவதை.. என்னை விரும்புவதாக சொன்னாள்.. உங்கள்

அனுமதி கேட்டு தானே காதல் செய்தேன்.. ஏன் எனக்கு இந்த நிலைமை… இதில் நான் செஞ்ச

தப்பு என்ன பா?”

அப்பாவிடம் மனதின் ரணத்தைக் கொட்டி தீர்க்க முடியாமல் திணற ஆரம்பித்தேன்..
அப்பாவிற்கு வார்த்தைகள் வெளியேற மறுத்தது.  தனிமையை மனம் நாடியது.. ஒவ்வொரு
அறையாக உள்சென்று வெளியேறினேன். ஏன்? எதற்கு? தெரியவில்லை.  ஒரு அமைதியான
இடத்தை மனம் எங்கெங்கோ அலைந்து தேடியது. நிற்காமல் நடந்துகொண்டே இருந்தேன்..
ஒரு நொடி இடைமறித்த அப்பா, என் முகம் பார்த்து… கண்களில் நீர்பொங்க தோளைத்தட்டி,
பெருகும் கண்ணீரை கண்களில் அழுத்தியவாறு  அகன்றார்….

என் அறையின் உள்சென்று கதவை மூடிக் கொண்டேன்… என் கட்டிலில் சாய்ந்தேன்..

இலவம் பஞ்சு கொடுக்க முடியாத சுகத்தை அன்று பூமித்தாய் எனக்கு அளிப்பாள் என்று

தோன்றியது.. தரையில் படுத்து புரண்டேன்… அழுதேன்..முடியும் வரை அழுதேன். என் உயிர்

எனக்கே பாரமாக இருந்தது… ஏதோ தோன்றியதாய் வேகமாய் எழுந்து, மேசையின்

உள்அறையை திறந்து கண்ணுக்கு  தென்பட்ட மாத்திரைகளை எல்லாம் எடுத்தேன். என்றோ

வைத்த தண்ணீர் பாட்டிலை கை நடுங்க எடுத்து மாத்திரைகளை ஒவ்வொன்றாக விழுங்க

ஆரம்பித்தேன்…ராகவியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில்.. மிக அருகில் தெரிய

ஆரம்பித்தது.. அப்படியே மெதுவாக சரிய ஆரம்பித்தேன். மெல்லமாக மறைந்து போனால்

என் ராகவி மீண்டும், என் வாழ்வில் வந்துபோனதைப் போலவே…

காதல் வலிக்கு மரணம் தவிர வேறு மருந்து இல்லை.  நண்பன் என்றோ எழுதி வைத்து
இறந்துபோன காதல்கடிதம் ஞாபகத்தில் வந்து போனது. மயக்கத்திலேயே தேடினேன்.
அவளது நிழல்படம் கைக்குத் தென்பட்டது… ஒரு கையால்அதனை என் நெஞ்சோடு
வைத்துகொண்டு…,  ஓரமாக சாய்ந்து… கால் குறுக்கி….. மறுகையை காலிடையே செருகி
அப்படியே கிடத்தப்பட்டேன்… பூமித்தாய் என்னை தாலாட்டுவதுபோல் உணர்ந்தேன். மெல்ல
மெல்ல என்னை இருள் சூழ ஆரம்பித்தது… அழகான இறக்கைகளுடன் எங்கேயோ பறந்து
சென்றுகொண்டிருந்தேன்…
“காதல். அழகான வார்த்தை…. உண்மை காதல் என்றும் தோற்காது… அவளுக்காக நான்
அங்கு காத்திருப்பேன்…”  வார்த்தைகளுடன் மெல்லமாக விடைபெற்றுக் கொண்டிருந்தேன்…

– ரூப்னா!

Posted in வகைப்படுத்தப்படாதது.

வெற்றிநோக்கிய முதல் அடி..!

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.

தெளிவான நீரிலே முகம் காண முடியும், மனம் சுத்தமாக இருந்தால், தெளிவு கிடைக்கும், குழந்தையை போல மனமிருந்தால் கடவுளை காண முடியும்,

மனதில் வேண்டாத அழுக்கை நிரப்புவதனால் தெளிவு கிடைக்காது, தெளிவு இல்லையென்றால் ஒரு காரியத்திலும் சரியான முடிவெடுக்க முடியாது, சரியான முடிவெடுத்து காரியங்களை செய்யாவிட்டால் முடிவு தோல்வியாகத்தான் இருக்கும்,

குழம்பிய சேற்றில் மீன் பிடிக்க முடியாமல் போவது உண்மைதானே.

http://www.soccerbyives.net/.a/6a00e54ef2975b88330120a5c2a48d970c-500wi

குறிக்கோள் இல்லா வாழ்க்கை துடுப்பு இல்லா ஓடம், ஆனால் குறிக்கோள் என்ன என்பதும் அதிக முக்கியம் அல்லவா, குறிக்கோள் என்பது தனிப்பட்ட ஒருவரின் சக்த்திக்கும் திறமைக்கும் சாதிக்கும் வரையறைகளுக்கும் உட்ப்பட்டவை.ஒரு குறிக்கோளை வாழ்க்கையில் உருவாக்கி கொண்டு, அதற்க்காக அதனை நோக்கி முன்னேறுவது அவசியமாக இருக்கிறது, முன்னேறும் பாதையில் நாம் எதிர்நோக்கும் ஏற்ற தாழ்வுகள் நம்மை முயற்ச்சியில் சலித்துவிடாமல் இருக்க மனவுறுதியும் நேர்மையும் உழைப்பும் அவசியம் தேவைப்படும்,

தோல்விகளே இல்லாத குறிக்கோள் ஆக்கபூர்வமான மேம்பட்ட அனுபவங்களை கொடுக்காது, தோல்விகள் தான் பெரும்பாலும் வரும் காலங்களில் நாம் எப்படி உறுதியுடனும் சரியாகவும் செயல்பட வேண்டும் என்பதை செயல் வழியாக நமக்கு கற்ப்பிக்கும் பாடமாவும் அமைகிறது.

ஒரு வெற்றியின் முழுமையை நாம் அனுபவிக்க பல தோல்விகளை கண்டே ஆக வேண்டும், கடின உழைப்பின்றி கிடைக்கும் எந்த ஆதாயமும் சரியான நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கவே முடியாது.

நேர்மையான உழைப்பிற்கு கிடைக்கும் மதிப்பும் மன நிம்மதியும் வாழ்வில் வேறெதற்கும் ஈடு இணையற்றது. தோல்வி நம்மை சோர்ந்துபோக வைக்கும், என்றாலும் தோல்விகள் தான் பல இணையற்ற பாடங்களை இலவசமாக நமக்கு அள்ளி தரும், இப்படிப்பட்ட பாடங்களை நாம் எந்த புத்தகம் மூலமாகவும் கற்றிருக்க இயலாது என்பது நம்மால் பிற்காலத்தில் நிச்சயம் உணர முடியும்.

தெளிவான மனம், தூய்மையான மனம், அதன் மூலதனமாக நாம் மேற்க்கொள்ளும் பல முயற்சிகள், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஆதாயம் இவையே வெற்றிக்கு வழி, அப்படி கிடைக்கும் வெற்றியை மட்டுமே நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியும்.

சிந்தனைகள் தொடரும்…

– ரூப்னா..!

Posted in வகைப்படுத்தப்படாதது.

கடவுளை கடந்து செல் – பகுதி 1.

யார் கடவுள்!

கடவுள் மனிதனை படைத்தானா? இல்லை, மனிதன் கடவுளைப் படைத்தானா? கடவுள் என ஒன்று உள்ளதா, இல்லையா?

இன்னும் எவராலும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆனால்,  இருப்பதாக நம்பப்படுகிறது.
“நம்வாழ்கை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ற மாயையான ஒரு நம்பிக்கையைப்போல!”

கடவுள் என்பது யார்? அல்லது கடவுள் என்பது என்ன? வேற்றுகிரகவாசியா? கண்ணுக்கு தெரியாத ஏதாவது அபூர்வ உயிரினமா? இல்லை வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரியா? வெறும் கற்பனை வடிவமா?

http://15mins.files.wordpress.com/2008/02/milkyway.jpg

ஒரு உணர்வாளன் கடவுளைப் பற்றி ஆராயவோ அல்லது எழுதவோ முற்ப்ப்படும்போது முதலில் வருவது கடுமையான எதிர்ப்புதான். அதையும் தாண்டியே இந்தக் கட்டுரையும்.

கடவுளை கடந்து செல் – பகுதி 1.

கடவுளைப்பற்றி ஆணித்தரமாக அடித்துக்கூறும் அளவுக்கு எந்த விடையும் காணாத போதிலும்  மனிதன் இங்கு பல கடவுள்களை படைத்திருக்கிறான். படைக்கிறான். படைப்பான்! (ஒரு சாதாரண நடிகைக்கே கோவில் கட்டியவன்தானே.) இக்கதை தொடர்ந்தால்,  எதிர்காலத்தில் நடிகர் நடிகைகள் கடவுள் ஆகி, குஷ்பு சாமி, நமீதா சாமி, ரஜினிவீரன் சாமி… போன்ற கடவுள்கள் வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை. இது சாமிகள் உருவாவதன் இரகசிய செய்முறை.

இனி வரும் தோழர், தோழிகள்  இதையும் நம்பினால், ஒரு பழமொழியுண்டு… ” கேட்டுக்கொண்டே இருந்தால் எங்கள் ஊருக்கு வாய்க்கால் நீர் வைகுண்டத்தில் இருந்து வருகிறது என்பார்களாம்” என் ஊர் பாட்டி அடிக்கடி சொல்வார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் மேலே சொன்ன பழமொழிகள் போல, பழமைவாதிகளின் முட்டாள்தனத்தை எடுத்துரைக்கும் சில பழமொழிகள்கூட விளக்கப்படாத கடவுளை ஆணித்தரமாக நிருபிப்பதுதான். வேத சாஷ்திரங்களில் உள்ளது போல வைகுண்டத்தை எடுத்துக்கொண்டால், வைகுண்டத்தில் பால்தான் நதியாய் ஓடுமாம். மனிதன் செல்லமுடியாத இடமான அங்கு எப்படி பசுமாடு சென்றது. அதுவும் கூட்டமாக.  கொஞ்சம் யோசிக்க நேரம் எடுத்தால் புரியும். சிரிக்கத்தான் தோன்றும். ஆனால், சில அறிவாளிகளின் பதிலோ வேறு மாதிரி இருக்கும். அப்படிப்பட்ட வைகுண்டத்தில்தான் கடவுள் இருக்கிறார். அதுதான் கடவுள் என்பார்கள்.

“கடவுள் என்பது மனிதனின் சிந்தனை எங்கே முற்றுப் பெறுகிறதோ அங்குதான் ஆரம்பிக்கப் படுகிறது.”

கடவுள் என்று ஒன்று இருந்தால், அது அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தால், மானிட அறிவியலின் விதிப்படியோ அல்லது சிந்தனை எட்டுமளவு ஏற்றுக்கொள்ளும்படி யோசித்தாலோ  அது நிச்சயம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. அது அனைத்துக்கும் மூலமான அதாவது, சூரியன், சந்திரன், கோள்கள், விண் கற்கள், பால்வெளிமனடலங்கள், இன்னும் இன்னும் என்று இங்கு உள்ள அனைத்திற்கும் மூலமான  அந்த ஒன்று.

எதற்காக இத்தனை பெயர்களில் மனிதனின் கற்பனையான சிலைகள். மந்திரங்கள், வேதங்கள், சபங்கள், இத்தனை மதங்கள், இத்தனை சடங்குகள், சம்பிரதாயங்கள். யாருக்குப் தேவை இவையெல்லாம். யாரால் உருவாக்கப் பட்டது இதெல்லாம். அந்த மூலத்தின் படைப்புகளா இவை யாவும். அந்த மூலப் பொருளா வந்து மந்திரங்கள் எழுதி, சபங்கள் ஓதி, சிலைகள் செய்தது. அனைத்தும் நமக்கு முன்னே பிறந்த அர்த்தமற்ற கற்ப்பனைவாதிகளின் அப்பட்டமான  கதைகள்.

http://tdsmapper.files.wordpress.com/2007/03/vara-perumal-dragon.jpgபிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?
எப்படித் தெரியும். தெரியாது!. பின்நாளில் அதுவும் கடவுளை எங்கனம் கண்டுகொள்கிறது.

“அதோ பார் அந்த ரோட்டோரமா ஒரு கோவில் தெரியுதா மா. அதுல கருப்பா நிக்குதல்ல. அதான் சாமி. எங்க சாமி கும்பிடு பாக்கலாம். ஆ…! அப்படித்தான்”
இங்கு, அந்த குழந்தைக்கு சாமி என்பது பயப்படவேண்டிய தாழ்ந்து செல்லப்படவேண்டிய அடிபணிய வேண்டிய ஒன்றாக போதிக்கப்படுகிறது. அதனால் உண்டாகும் பயன்கள் இவையிவை  என கட்டுக்கதை, கற்பனைகளால் அக்குழந்தை கட்டுப்படுத்தப்படுகிறது. .

எந்த குழந்தையும், எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை. மாறாக குழந்தை பருவத்தில்
தன் பெற்றோரிடமிருந்தும், சுற்றியுள்ள மாந்தர்களிடமிருந்தும், பழகும் விஷயங்களிடமுமிருந்தே  குழந்தைகள் கற்றுகொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு கற்றுக்கொள்ளும் திறனை இயற்க்கை இவ்வாறு வழங்கியுள்ளது.

குழந்தைகள் மற்றவர் என்ன செய்கிறார்கள் அல்லது கூறுகிறார்கள் என்பதை முதலில் உற்றுகவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும். அதுபோல நாமும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். சொல்லப் போனால், அவர்களிடம் கற்றுக்கொண்டதுதான் முழுதுமே.  அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.

எடுத்துக்காட்டாக நாம் குடும்பம் என்ற உலகத்தில், முன்னோர்கள் ஹிந்து மதத்தை பின்பற்றுவாராயின், நாமும் அதையே பின்பற்றுகிறோம். மாறாக இஸ்லாம், கிறிஷ்துவத்தை பின்பற்றுவாராயின் நாமும் அதையே பின்பற்றுகிறோம். இல்லை வேறு மதங்களை பின்பற்றுகிறோம். அதனால் என்ன பயன் என்று கூட யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை. அப்படியே மதங்கள் மாறினாலும், யாரோ சொன்ன கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை தன் குழந்தையாக்கிக் கொண்டராக…. இப்படிப்பட்ட மதிகெட்ட வார்த்தைகளை நம்பியும ஏதோ ஒரு அற்ப சந்தோஷத்தற்க்ககவும் நான் விசித்திரமானவன் என்று காட்டிக்கொள்வதற்க்ககவும் மத வெறியர்கள் வளர்க்கும் மத நம்பிக்கையை, (மத வெறி என்றுகூட சொல்லலாம்) அப்படியே… என்ன கலக்கப் பட்டிருக்கிறது என்று ஆராயாமலே குடித்தும் விடுகிறோம் என்று சொன்னால்கூட அது குறைவாகவே விமர்சிபத்தற்க்கு சமம். .

நம் அறிவு முதிர்ச்சி அடைந்தபிறகும் சுய அறிவு வேருன்றியபிறகும் “பரிணாமம் நமக்கென்று ஒரு தனி அறிவை கொடுத்திருக்கிறது, அது தெரியாத விஷயங்களை தேடல்களில் வாயுளாக அறிந்துகொள்ளத்தான்” என்பதை அதிகமான யாரும் ஆமோதிக்க முன்வருவதில்லை. இது மீண்டுமொரு வேடிக்கையான ஒன்று.

http://fatherstephen.files.wordpress.com/2009/01/wrath-of-god.jpg

கடவுளைப் பற்றிய விஷயங்கள் சிறிதேனும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்., ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை. வளரும் பருவத்தில் எந்த நீர் உற்றப்பட்டதோ அதே தன்மை உடைய  நீருக்ககவே ஒரு தாவரம் கா த்திருக்குமாம். அதைவிட அதிக தனிம, நீர்ம வளங்கள் உள்ள நீரை வார்த்தாலும் அது திருப்தியடையாதாம். அதுபோன்று பகுத்தறிவு கருத்துக்களுக்கு
மனம் அதற்க்கு இடம் கொடுக்கவும் விடுவதில்லை. அதனை அதன் போக்கிலேயே விட்டு வரும் சந்ததிகளுக்கும் தவறான போதனைகளை போதித்து விடுகிறோம்.

கடவுளை அறிந்து கொள்ளுங்கள்:

1). கடவுள் என்று ஒன்று இருந்தால் அது மனிதனை படைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

2). மனிதன் என்பவன் என்ன விதி என்ற தூரபொறியை வைத்து இயக்கி விளையாடும் பொம்மைகளா கடவுளுக்கு?

3). மனிதனை தோற்றுவிக்கும் அவசியம் என்ன வந்தது கடவுளுக்கு?

கடவுளானவன் மனிதர்களை தோற்றுவித்திருக்கிறான் என்ற கருத்தை ஒப்புக்கொள்ளவேண்டுமானால், அவனே அனைத்தையும் ஆள்பவன், அவனே அனைத்து அசைவுகளுக்கும் மூலமானவன் என்றால் பின்பு எதற்காக மனிதனின் அறிவை அழிவுசெய்யும் ஆயுதங்கள் தயாரிக்கவும் அடிமைப்பட்டவர்களை அதன் வாயுலாகவே கொள்ளவும் சிந்திக்க வைக்கிறான். அப்படி சிந்திக்கவைத்தால் கடவுள் என்பவனோ அல்லது என்பவளோ அல்லது என்பதோ நிச்சயம் ஒரு கொடூரஅரக்க குணம் கொண்டதாகவே இருக்கும்.

இல்லை, நீங்கள் சொல்வதென்பது சாத்தான்களின் வேலை என்று நீங்கள் குறுக்கிட்டால், சாத்தான்களை படைத்தது யார்? அவை எங்கிருந்து வந்தது?  நீங்கள் சொல்ல விளையும்  அல்லது இயலக்கூடிய பதில் இரண்டாகமட்டுமே  இருக்க முடியும்.

1). கடவுளிடமே.

2). இல்லை. சாத்தான்கள் கடவுளால் படைக்கப்படவில்லை. அவை கடவுளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது அல்லது உருவாகியது.

என்றால், உருவாக்கியதும் கொடூரமான விளையாட்டு சிந்தனை உடையதே. தானே உருவாகியது என்றால் ஒரேயாடியாக  சாத்தான்களையே வணங்கவேன்டியதுதானே. ஒரு பழமொழிகூட உண்டு. “சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் கால்லிலேயே விழுந்துவிடலாம்.” பின்பு ஏன் சாத்தான்கள்வணங்கப்படுவதில்லை.

மனிதன் தனக்குத் தோன்றிய  எண்ணங்களையெல்லாம் அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று பல கதைகளை புணைந்தான். அது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக, மக்களால் யோசிக்க முடியாததாக இருக்கும் பட்சத்தில் அப்படியே மக்களால் ஏற்றுக்கொள்ளவும்பட்டது.

இங்கு கடவுள் என்று வர்ணிக்கப்படுவது அந்த யூகிக்கமுடியாத, எல்லாவற்றிற்கும் மூலமான ஒன்றே ஒன்றுதான்.

“அது நம்மை காக்கவும் செய்வதில்லை. அழிக்கவும் செய்வதில்லை. அதனிடம்போய் கையேந்தி நிற்கவும் அது வேண்டுவதில்லை.”

ஒரு ஆலமரத்தின் விதையானது எப்படி ஒரு ஆலமரமாக நிமிர்ந்து தன்னை படைத்தவனுக்கு நிகராக நிற்கிறதோ, அவ்வாறே நாமும் வளரவேண்டும்.  இந்த உலகம் நம் மனதினைப் போல அதன் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது . இங்கு ஏற்ப்படும் எந்த விடயங்களுக்கும் அந்த எல்லாவற்றிற்கும்
மூலமான ஒன்றிற்கும் சம்பந்தங்கள் என்று ஒன்று இருக்க வாய்ப்புகளே இல்லை.

இங்கே மனிதனால் வெளியிடப்படும் நச்சு வாயுக்களும், எழும்பும் கட்டிடங்களுமே இத்தனை புவியல் மாற்றத்திற்கும், விண்வெளிமாற்றத்திற்க்கும் காரணம். கடவுளின் பெயரால் அறியப்படும் அந்த கற்பனைக்கோ அல்லது சாத்தான் என்ற முட்டாள்தனமான கதைகளுக்கோ  இந்த மாற்றங்களுடன்  நூல் அளவுதொடர்புகள்கூட   இருக்க வாய்ப்பில்லை. மனிதனானவன், என்று மதங்களைகடந்து  ஆத்திகம் நாத்திகம் அறிவியல் கடந்து புதுவிதமான ஒரு எல்லையில்லாத புள்ளியில் நின்று சிந்திக்கின்றானோ, அன்றுதான் இவ்விதமான விடயங்களைஅவனால் உணரமுடியும்.

https://i0.wp.com/fc00.deviantart.net/fs29/f/2008/137/c/1/We_Own_The_Sky_v_2_by_JsoNsw_7.png

அறிவியலிலும் சில முட்டாள்தனங்கள்

டார்வின் தான் எழுதிய கொள்கையில் மிகப்பெரிய ஒரு ஓட்டையை விட்டுச் சென்றுவிட்டார். மனிதன் குரங்கிலிருந்தும்  குரங்கு, அதன் உருவம் ஒத்த வேறு விலங்கிடமிருந்தும் அவ்விலங்கு, நீர்நிலவாழ் உயிரிடமிருந்தும் அதன் மூலம் அமீபா என்ற முதல் உயிரி என்றும் கூறியவர், அமீபா உருவாகிய மூலத்தை மறைத்துவிட்டார். அந்த முதல் ஒற்றை உயிரினம் உண்டான மூலத்தை அவரால் கண்டறியவோ அல்லது யுகிக்கவோ முடியவில்லை என்பதே உண்மை. அதன் பழியை அப்படியே எடுத்துச்சென்று வேதிபொருட்களின்மேல் திணித்தார்.

அவர்கூறியபடியே உயிரினம் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். அது தொடருமா? சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

மனிதனுக்கு இன்று நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் பறக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பறவைகளுக்கும் இடம்நகர மரக்கிளைகளினூடே நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.   மனிதன் இரு இறக்கைகளுடனும், பறவைகள் குரங்குகளைப் போன்ற  நீளமான கால்களுடன் வளம்வந்தால் அது எப்படி இருக்கும். யூகிக்க முடிகிறதா? இதைத்தானே டார்வின் பரிணாம வளர்ச்சி என்கிறார். இதற்க்கு பெயர்தான் பரிணாமவளர்ச்சி என்றால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கூட இதனைக்கேட்டு கைதட்டிச் சிரிக்கும் வாய்ப்பு உண்டு. அப்படி வேதி பொருட்களின் வேதியல் மாற்றமே அமீபாவின் காரணம் என்றால், வேதி பொருள் உருவாக வேண்டிய அந்த உயிர்மூலம் எது என்பதே எனது கேள்வி. அங்குதான் நான் குறிப்பிடும் அனைத்துக்கும் மூலமான அந்த ஒன்று கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.

அது அதிகசாத்தியக்கூறு உள்ள ஒரே வரத்தை மட்டும் நமக்குத்தருவதாக கூறமுடியும். அது நம் மனதை ஒருநிலைப்படுத்துவது. அறிவியலால் ESP ( Extra sensory power) போன்ற அறியப்பட்ட, சில விளக்க முடியாத ஆற்றல்களை மனித ஆழ்நிலை மனதிற்கு வழங்குவது. மற்றபடி இரு கை இரு கால் மனிதனால் உண்டாக்கப்பட்ட கார், பைக், வீடு, சொத்துபத்து… இவையெல்லாம் அந்த மூலம் தருமென நீங்கள் நினைத்தால்..

மன்னிக்கவும். முட்டாள்களின் பட்டியலில் முதலிடம் உங்களுக்குத்தான்.

கடவுள் – அது கருதுவதற்கு மட்டுமே.. இன்னும் அலசுவோம்.

தொடரும்..

அதற்க்கு