கடவுளை கடந்து செல் – பகுதி 1.

யார் கடவுள்!

கடவுள் மனிதனை படைத்தானா? இல்லை, மனிதன் கடவுளைப் படைத்தானா? கடவுள் என ஒன்று உள்ளதா, இல்லையா?

இன்னும் எவராலும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆனால்,  இருப்பதாக நம்பப்படுகிறது.
“நம்வாழ்கை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ற மாயையான ஒரு நம்பிக்கையைப்போல!”

கடவுள் என்பது யார்? அல்லது கடவுள் என்பது என்ன? வேற்றுகிரகவாசியா? கண்ணுக்கு தெரியாத ஏதாவது அபூர்வ உயிரினமா? இல்லை வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரியா? வெறும் கற்பனை வடிவமா?

http://15mins.files.wordpress.com/2008/02/milkyway.jpg

ஒரு உணர்வாளன் கடவுளைப் பற்றி ஆராயவோ அல்லது எழுதவோ முற்ப்ப்படும்போது முதலில் வருவது கடுமையான எதிர்ப்புதான். அதையும் தாண்டியே இந்தக் கட்டுரையும்.

கடவுளை கடந்து செல் – பகுதி 1.

கடவுளைப்பற்றி ஆணித்தரமாக அடித்துக்கூறும் அளவுக்கு எந்த விடையும் காணாத போதிலும்  மனிதன் இங்கு பல கடவுள்களை படைத்திருக்கிறான். படைக்கிறான். படைப்பான்! (ஒரு சாதாரண நடிகைக்கே கோவில் கட்டியவன்தானே.) இக்கதை தொடர்ந்தால்,  எதிர்காலத்தில் நடிகர் நடிகைகள் கடவுள் ஆகி, குஷ்பு சாமி, நமீதா சாமி, ரஜினிவீரன் சாமி… போன்ற கடவுள்கள் வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை. இது சாமிகள் உருவாவதன் இரகசிய செய்முறை.

இனி வரும் தோழர், தோழிகள்  இதையும் நம்பினால், ஒரு பழமொழியுண்டு… ” கேட்டுக்கொண்டே இருந்தால் எங்கள் ஊருக்கு வாய்க்கால் நீர் வைகுண்டத்தில் இருந்து வருகிறது என்பார்களாம்” என் ஊர் பாட்டி அடிக்கடி சொல்வார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் மேலே சொன்ன பழமொழிகள் போல, பழமைவாதிகளின் முட்டாள்தனத்தை எடுத்துரைக்கும் சில பழமொழிகள்கூட விளக்கப்படாத கடவுளை ஆணித்தரமாக நிருபிப்பதுதான். வேத சாஷ்திரங்களில் உள்ளது போல வைகுண்டத்தை எடுத்துக்கொண்டால், வைகுண்டத்தில் பால்தான் நதியாய் ஓடுமாம். மனிதன் செல்லமுடியாத இடமான அங்கு எப்படி பசுமாடு சென்றது. அதுவும் கூட்டமாக.  கொஞ்சம் யோசிக்க நேரம் எடுத்தால் புரியும். சிரிக்கத்தான் தோன்றும். ஆனால், சில அறிவாளிகளின் பதிலோ வேறு மாதிரி இருக்கும். அப்படிப்பட்ட வைகுண்டத்தில்தான் கடவுள் இருக்கிறார். அதுதான் கடவுள் என்பார்கள்.

“கடவுள் என்பது மனிதனின் சிந்தனை எங்கே முற்றுப் பெறுகிறதோ அங்குதான் ஆரம்பிக்கப் படுகிறது.”

கடவுள் என்று ஒன்று இருந்தால், அது அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தால், மானிட அறிவியலின் விதிப்படியோ அல்லது சிந்தனை எட்டுமளவு ஏற்றுக்கொள்ளும்படி யோசித்தாலோ  அது நிச்சயம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. அது அனைத்துக்கும் மூலமான அதாவது, சூரியன், சந்திரன், கோள்கள், விண் கற்கள், பால்வெளிமனடலங்கள், இன்னும் இன்னும் என்று இங்கு உள்ள அனைத்திற்கும் மூலமான  அந்த ஒன்று.

எதற்காக இத்தனை பெயர்களில் மனிதனின் கற்பனையான சிலைகள். மந்திரங்கள், வேதங்கள், சபங்கள், இத்தனை மதங்கள், இத்தனை சடங்குகள், சம்பிரதாயங்கள். யாருக்குப் தேவை இவையெல்லாம். யாரால் உருவாக்கப் பட்டது இதெல்லாம். அந்த மூலத்தின் படைப்புகளா இவை யாவும். அந்த மூலப் பொருளா வந்து மந்திரங்கள் எழுதி, சபங்கள் ஓதி, சிலைகள் செய்தது. அனைத்தும் நமக்கு முன்னே பிறந்த அர்த்தமற்ற கற்ப்பனைவாதிகளின் அப்பட்டமான  கதைகள்.

http://tdsmapper.files.wordpress.com/2007/03/vara-perumal-dragon.jpgபிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?
எப்படித் தெரியும். தெரியாது!. பின்நாளில் அதுவும் கடவுளை எங்கனம் கண்டுகொள்கிறது.

“அதோ பார் அந்த ரோட்டோரமா ஒரு கோவில் தெரியுதா மா. அதுல கருப்பா நிக்குதல்ல. அதான் சாமி. எங்க சாமி கும்பிடு பாக்கலாம். ஆ…! அப்படித்தான்”
இங்கு, அந்த குழந்தைக்கு சாமி என்பது பயப்படவேண்டிய தாழ்ந்து செல்லப்படவேண்டிய அடிபணிய வேண்டிய ஒன்றாக போதிக்கப்படுகிறது. அதனால் உண்டாகும் பயன்கள் இவையிவை  என கட்டுக்கதை, கற்பனைகளால் அக்குழந்தை கட்டுப்படுத்தப்படுகிறது. .

எந்த குழந்தையும், எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை. மாறாக குழந்தை பருவத்தில்
தன் பெற்றோரிடமிருந்தும், சுற்றியுள்ள மாந்தர்களிடமிருந்தும், பழகும் விஷயங்களிடமுமிருந்தே  குழந்தைகள் கற்றுகொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு கற்றுக்கொள்ளும் திறனை இயற்க்கை இவ்வாறு வழங்கியுள்ளது.

குழந்தைகள் மற்றவர் என்ன செய்கிறார்கள் அல்லது கூறுகிறார்கள் என்பதை முதலில் உற்றுகவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும். அதுபோல நாமும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். சொல்லப் போனால், அவர்களிடம் கற்றுக்கொண்டதுதான் முழுதுமே.  அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.

எடுத்துக்காட்டாக நாம் குடும்பம் என்ற உலகத்தில், முன்னோர்கள் ஹிந்து மதத்தை பின்பற்றுவாராயின், நாமும் அதையே பின்பற்றுகிறோம். மாறாக இஸ்லாம், கிறிஷ்துவத்தை பின்பற்றுவாராயின் நாமும் அதையே பின்பற்றுகிறோம். இல்லை வேறு மதங்களை பின்பற்றுகிறோம். அதனால் என்ன பயன் என்று கூட யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை. அப்படியே மதங்கள் மாறினாலும், யாரோ சொன்ன கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை தன் குழந்தையாக்கிக் கொண்டராக…. இப்படிப்பட்ட மதிகெட்ட வார்த்தைகளை நம்பியும ஏதோ ஒரு அற்ப சந்தோஷத்தற்க்ககவும் நான் விசித்திரமானவன் என்று காட்டிக்கொள்வதற்க்ககவும் மத வெறியர்கள் வளர்க்கும் மத நம்பிக்கையை, (மத வெறி என்றுகூட சொல்லலாம்) அப்படியே… என்ன கலக்கப் பட்டிருக்கிறது என்று ஆராயாமலே குடித்தும் விடுகிறோம் என்று சொன்னால்கூட அது குறைவாகவே விமர்சிபத்தற்க்கு சமம். .

நம் அறிவு முதிர்ச்சி அடைந்தபிறகும் சுய அறிவு வேருன்றியபிறகும் “பரிணாமம் நமக்கென்று ஒரு தனி அறிவை கொடுத்திருக்கிறது, அது தெரியாத விஷயங்களை தேடல்களில் வாயுளாக அறிந்துகொள்ளத்தான்” என்பதை அதிகமான யாரும் ஆமோதிக்க முன்வருவதில்லை. இது மீண்டுமொரு வேடிக்கையான ஒன்று.

http://fatherstephen.files.wordpress.com/2009/01/wrath-of-god.jpg

கடவுளைப் பற்றிய விஷயங்கள் சிறிதேனும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்., ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை. வளரும் பருவத்தில் எந்த நீர் உற்றப்பட்டதோ அதே தன்மை உடைய  நீருக்ககவே ஒரு தாவரம் கா த்திருக்குமாம். அதைவிட அதிக தனிம, நீர்ம வளங்கள் உள்ள நீரை வார்த்தாலும் அது திருப்தியடையாதாம். அதுபோன்று பகுத்தறிவு கருத்துக்களுக்கு
மனம் அதற்க்கு இடம் கொடுக்கவும் விடுவதில்லை. அதனை அதன் போக்கிலேயே விட்டு வரும் சந்ததிகளுக்கும் தவறான போதனைகளை போதித்து விடுகிறோம்.

கடவுளை அறிந்து கொள்ளுங்கள்:

1). கடவுள் என்று ஒன்று இருந்தால் அது மனிதனை படைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

2). மனிதன் என்பவன் என்ன விதி என்ற தூரபொறியை வைத்து இயக்கி விளையாடும் பொம்மைகளா கடவுளுக்கு?

3). மனிதனை தோற்றுவிக்கும் அவசியம் என்ன வந்தது கடவுளுக்கு?

கடவுளானவன் மனிதர்களை தோற்றுவித்திருக்கிறான் என்ற கருத்தை ஒப்புக்கொள்ளவேண்டுமானால், அவனே அனைத்தையும் ஆள்பவன், அவனே அனைத்து அசைவுகளுக்கும் மூலமானவன் என்றால் பின்பு எதற்காக மனிதனின் அறிவை அழிவுசெய்யும் ஆயுதங்கள் தயாரிக்கவும் அடிமைப்பட்டவர்களை அதன் வாயுலாகவே கொள்ளவும் சிந்திக்க வைக்கிறான். அப்படி சிந்திக்கவைத்தால் கடவுள் என்பவனோ அல்லது என்பவளோ அல்லது என்பதோ நிச்சயம் ஒரு கொடூரஅரக்க குணம் கொண்டதாகவே இருக்கும்.

இல்லை, நீங்கள் சொல்வதென்பது சாத்தான்களின் வேலை என்று நீங்கள் குறுக்கிட்டால், சாத்தான்களை படைத்தது யார்? அவை எங்கிருந்து வந்தது?  நீங்கள் சொல்ல விளையும்  அல்லது இயலக்கூடிய பதில் இரண்டாகமட்டுமே  இருக்க முடியும்.

1). கடவுளிடமே.

2). இல்லை. சாத்தான்கள் கடவுளால் படைக்கப்படவில்லை. அவை கடவுளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது அல்லது உருவாகியது.

என்றால், உருவாக்கியதும் கொடூரமான விளையாட்டு சிந்தனை உடையதே. தானே உருவாகியது என்றால் ஒரேயாடியாக  சாத்தான்களையே வணங்கவேன்டியதுதானே. ஒரு பழமொழிகூட உண்டு. “சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் கால்லிலேயே விழுந்துவிடலாம்.” பின்பு ஏன் சாத்தான்கள்வணங்கப்படுவதில்லை.

மனிதன் தனக்குத் தோன்றிய  எண்ணங்களையெல்லாம் அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று பல கதைகளை புணைந்தான். அது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக, மக்களால் யோசிக்க முடியாததாக இருக்கும் பட்சத்தில் அப்படியே மக்களால் ஏற்றுக்கொள்ளவும்பட்டது.

இங்கு கடவுள் என்று வர்ணிக்கப்படுவது அந்த யூகிக்கமுடியாத, எல்லாவற்றிற்கும் மூலமான ஒன்றே ஒன்றுதான்.

“அது நம்மை காக்கவும் செய்வதில்லை. அழிக்கவும் செய்வதில்லை. அதனிடம்போய் கையேந்தி நிற்கவும் அது வேண்டுவதில்லை.”

ஒரு ஆலமரத்தின் விதையானது எப்படி ஒரு ஆலமரமாக நிமிர்ந்து தன்னை படைத்தவனுக்கு நிகராக நிற்கிறதோ, அவ்வாறே நாமும் வளரவேண்டும்.  இந்த உலகம் நம் மனதினைப் போல அதன் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது . இங்கு ஏற்ப்படும் எந்த விடயங்களுக்கும் அந்த எல்லாவற்றிற்கும்
மூலமான ஒன்றிற்கும் சம்பந்தங்கள் என்று ஒன்று இருக்க வாய்ப்புகளே இல்லை.

இங்கே மனிதனால் வெளியிடப்படும் நச்சு வாயுக்களும், எழும்பும் கட்டிடங்களுமே இத்தனை புவியல் மாற்றத்திற்கும், விண்வெளிமாற்றத்திற்க்கும் காரணம். கடவுளின் பெயரால் அறியப்படும் அந்த கற்பனைக்கோ அல்லது சாத்தான் என்ற முட்டாள்தனமான கதைகளுக்கோ  இந்த மாற்றங்களுடன்  நூல் அளவுதொடர்புகள்கூட   இருக்க வாய்ப்பில்லை. மனிதனானவன், என்று மதங்களைகடந்து  ஆத்திகம் நாத்திகம் அறிவியல் கடந்து புதுவிதமான ஒரு எல்லையில்லாத புள்ளியில் நின்று சிந்திக்கின்றானோ, அன்றுதான் இவ்விதமான விடயங்களைஅவனால் உணரமுடியும்.

https://i0.wp.com/fc00.deviantart.net/fs29/f/2008/137/c/1/We_Own_The_Sky_v_2_by_JsoNsw_7.png

அறிவியலிலும் சில முட்டாள்தனங்கள்

டார்வின் தான் எழுதிய கொள்கையில் மிகப்பெரிய ஒரு ஓட்டையை விட்டுச் சென்றுவிட்டார். மனிதன் குரங்கிலிருந்தும்  குரங்கு, அதன் உருவம் ஒத்த வேறு விலங்கிடமிருந்தும் அவ்விலங்கு, நீர்நிலவாழ் உயிரிடமிருந்தும் அதன் மூலம் அமீபா என்ற முதல் உயிரி என்றும் கூறியவர், அமீபா உருவாகிய மூலத்தை மறைத்துவிட்டார். அந்த முதல் ஒற்றை உயிரினம் உண்டான மூலத்தை அவரால் கண்டறியவோ அல்லது யுகிக்கவோ முடியவில்லை என்பதே உண்மை. அதன் பழியை அப்படியே எடுத்துச்சென்று வேதிபொருட்களின்மேல் திணித்தார்.

அவர்கூறியபடியே உயிரினம் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். அது தொடருமா? சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

மனிதனுக்கு இன்று நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் பறக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பறவைகளுக்கும் இடம்நகர மரக்கிளைகளினூடே நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.   மனிதன் இரு இறக்கைகளுடனும், பறவைகள் குரங்குகளைப் போன்ற  நீளமான கால்களுடன் வளம்வந்தால் அது எப்படி இருக்கும். யூகிக்க முடிகிறதா? இதைத்தானே டார்வின் பரிணாம வளர்ச்சி என்கிறார். இதற்க்கு பெயர்தான் பரிணாமவளர்ச்சி என்றால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கூட இதனைக்கேட்டு கைதட்டிச் சிரிக்கும் வாய்ப்பு உண்டு. அப்படி வேதி பொருட்களின் வேதியல் மாற்றமே அமீபாவின் காரணம் என்றால், வேதி பொருள் உருவாக வேண்டிய அந்த உயிர்மூலம் எது என்பதே எனது கேள்வி. அங்குதான் நான் குறிப்பிடும் அனைத்துக்கும் மூலமான அந்த ஒன்று கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.

அது அதிகசாத்தியக்கூறு உள்ள ஒரே வரத்தை மட்டும் நமக்குத்தருவதாக கூறமுடியும். அது நம் மனதை ஒருநிலைப்படுத்துவது. அறிவியலால் ESP ( Extra sensory power) போன்ற அறியப்பட்ட, சில விளக்க முடியாத ஆற்றல்களை மனித ஆழ்நிலை மனதிற்கு வழங்குவது. மற்றபடி இரு கை இரு கால் மனிதனால் உண்டாக்கப்பட்ட கார், பைக், வீடு, சொத்துபத்து… இவையெல்லாம் அந்த மூலம் தருமென நீங்கள் நினைத்தால்..

மன்னிக்கவும். முட்டாள்களின் பட்டியலில் முதலிடம் உங்களுக்குத்தான்.

கடவுள் – அது கருதுவதற்கு மட்டுமே.. இன்னும் அலசுவோம்.

தொடரும்..

அதற்க்கு

One thought on “கடவுளை கடந்து செல் – பகுதி 1.

  1. //1)கடவுள் என்று ஒன்று இருந்தால் அது மனிதனை படைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

    2). மனிதன் என்பவன் என்ன விதி என்ற தூரபொறியை வைத்து இயக்கி விளையாடும் பொம்மைகளா கடவுளுக்கு?

    3). மனிதனை தோற்றுவிக்கும் அவசியம் என்ன வந்தது கடவுளுக்கு?//

    Good questions!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s