அது ஒரு அழகிய நிமிடங்களின் நகர்வு… இதுவரை இல்லாததாய் இறக்கைகள் முளைத்துப்
பறந்து கொண்டிருந்தேன் நான்… என் வாழ்வில் முதன் முதலில் இப்படியொரு அனுபவம்…
இருந்தாலும் என் கண்களில் மட்டும் ஏதோ ஒரு கண்ணீரின் ஈரப்பசை அப்படியே இஞ்சி
அரித்துக் கொண்டிருந்தது..
எந்த மனம்தான் தோல்வியைத் தாங்கும் வல்லமை படைத்தது..? துன்பம் மேலோங்கும்
போதுதான் மனதின் ரூபத்தை அறிய முடிகிறது.
என் மனதை வருத்திக்கொள்வதாய் என் நெஞ்சை நானே பலமுறை பலம்கொண்டு அடித்த
வலிகூட எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை…என்னுள் இருந்த ஆழமான ரணம்..,
மரண வேதனையை செரிந்துகொண்டிருந்தது. நான் மெல்ல மெல்ல மாறிக்
கொண்டிருந்தேன்!
என் முகத்தை கண்ணாடியில் பார்கையில் எனக்குள்ளேயே என்மீதான வெறுப்புகள் பீரிட்ட
ஆரம்பித்தது. என் முகம் காட்டிய கண்ணாடிகளை ஒன்றுவிடாமல் உடைத்து தள்ளினேன்..
என் இதயம் ஓடைந்தது போல் சிதறல்கள் தெறித்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை
மறக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடித்தது போல் உடைக்க இன்னும் ஏதாவது கிடைக்குமா
என்ற ஒரு வெறி என்னோடு கலந்து அர்த்தமற்ற சிரிப்புடன் பொருட்களை
தேடிக்கொண்டிருந்தன என் கண்கள்.. உடைத்துத் தள்ளினேன். கண்ணில்
பட்டதையெல்லாம் உடைத்துத் தள்ளினேன். அருகில் இருந்த புத்தக பேழையையும்
முழுபலம் கொண்டு கீழே தள்ளினேன். சட்டைகளை கிழித்தெறிந்தேன். என்னை முழுதாக
இழந்திருந்தேன். அனைத்தையும் உடைத்து, வேர்வை சொட்ட சொட்ட.. பலமான
மூச்சுக்கற்றுகளுடன் மண்டியிட்டு அமர்ந்தேன். கைகள் ஒப்புகளை தேடின. விழுந்து கிடந்த
பேழையின் மேல் ஒரு கைகொண்டு பிடித்தேன். உடைந்த ஒருதுண்டு இன்னும் சில
துண்டுகள் ஆயின. இடையே தான் குருதி நனைத்த கவிதை வரிகளுடன் நூலாக
அதிலிருந்து பாரதி வந்து விழுந்தான்.. அதனுள் இருந்த ராகவியின் படமும் வந்து விழுந்தது..
என் ராகவிக்கு பாரதி மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கும் பாரதியை பிடிக்கும்.
“ராகவி. என் நிலையை நிழலாக வந்து எட்டி பார்க்கிறாள் போல.. கள்ளி.. பாரதி நீதான்
கூட்டிவந்தாயா உன் தோழியை? நான் உயிரோடுதான் இருக்கிறேன். பார்த்துக்கொள்” என்று
சொல்லியபடியே இரு கைகளையும் மடித்து புஜபலம் பொருந்தியவன் போல் நின்று
காட்டிக்கொண்டிருந்தேன் பாரதியிடம்.
அழுகை விம்மளாக மாறியது..
” ராகவி.. என்னை இசைக்க வந்தவள்… என்னை மறந்து விட்டாளாம்.. ஒரு நொடியில்
என்னை தூக்கி எறிந்து விட்டாளாம் பா!!! எல்லாம் முடிந்து விட்டது..”
ஏதேனும் ஒரு வார்த்தையில் கூறிவிட்டால், என் தந்தையை உடனே இருக்க கட்டிப்பிடித்து
அழனும் போல இருந்தது.. ஆனால், எந்த ஆறுதல் வார்த்தைகளும் வராமல் கண்களில் நீர்
மட்டுமே வழிந்தது அப்பாவுக்கு…
“அவளாகவே வந்தாள்… என் தேவதை.. என்னை விரும்புவதாக சொன்னாள்.. உங்கள்
அனுமதி கேட்டு தானே காதல் செய்தேன்.. ஏன் எனக்கு இந்த நிலைமை… இதில் நான் செஞ்ச
தப்பு என்ன பா?”
என் அறையின் உள்சென்று கதவை மூடிக் கொண்டேன்… என் கட்டிலில் சாய்ந்தேன்..
இலவம் பஞ்சு கொடுக்க முடியாத சுகத்தை அன்று பூமித்தாய் எனக்கு அளிப்பாள் என்று
தோன்றியது.. தரையில் படுத்து புரண்டேன்… அழுதேன்..முடியும் வரை அழுதேன். என் உயிர்
எனக்கே பாரமாக இருந்தது… ஏதோ தோன்றியதாய் வேகமாய் எழுந்து, மேசையின்
உள்அறையை திறந்து கண்ணுக்கு தென்பட்ட மாத்திரைகளை எல்லாம் எடுத்தேன். என்றோ
வைத்த தண்ணீர் பாட்டிலை கை நடுங்க எடுத்து மாத்திரைகளை ஒவ்வொன்றாக விழுங்க
ஆரம்பித்தேன்…ராகவியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில்.. மிக அருகில் தெரிய
ஆரம்பித்தது.. அப்படியே மெதுவாக சரிய ஆரம்பித்தேன். மெல்லமாக மறைந்து போனால்
என் ராகவி மீண்டும், என் வாழ்வில் வந்துபோனதைப் போலவே…
– ரூப்னா!
ரூபனா. வணக்கம். நல்ல சிறுகதை. தொடருமா இல்லை நிறைவு பெறுகிறதா என்று தெரியவில்லை. அனுபவித்து எழுதி உள்ளீர்கள். இரு முறை படித்தால்தான் தெளிவாக புரிகிறது. நல்ல அழகானஆழ்ந்த கற்பனை.
Thank u for ur comment ms.Kavi. its contning in the next post..