கடவுளை கடந்து செல் – பகுதி 2

கடவுள் – கருதுவதற்கே..! சரி. கடவுளை எப்படி கருத வேண்டும்? கருதப்படும் கடவுளின் நோக்கம் என்ன? இப்படி ஒரு கூற்று எழுப்பப்படும்போது..

1. எப்படி சில விடயங்களும் ( பகுத்தறிவாளர்களால் அணிச்சையான செயலென்று கருதப்படுவது) மக்களை கடவுள் இருக்கிறார் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, அவர்களின் யோசிக்கும் திறனை முடக்குவதாக நடந்துவிடுகிறது?
2. கடவுள் நம்பிக்கையாளரால் எப்படி ஒரு பிரார்த்தனை இடத்திற்கு சென்று வந்த உடனாகவோ அல்லது ஜெபம் செய்த உடனாகவோ நாம் முழுசுகம் அடைந்தவராக உணர முடிகிறது?
3. கடவுளை எண்ணியவுடனேயோ அல்லது கற்பனை வடிவங்களின் வாயுலாக கண்டவுடனோ மனது எப்படி அமைதி பெறுகிறது?

என்பதுபோன்ற கேள்விகளின் விடைகளே கடவுளை கருதுவதற்கான காரணியை நிர்ணயிக்கின்றது.  இதனைப்பற்றிய மக்களின் மனம் அறியவும், அவர்களின் நம்பிக்கை முறைகளை அறிந்துகொள்ளவும் கொஞ்சம் ஆழமாக இறங்கி ஆராய்ந்தோம். அதில் நாம், முதலில் தெரிவுசெயதவர்கள் அனைவரும் மிக அதிகமான, பகுத்தறிவு என்றால் என்னவென்று வினவக்கூடிய உயர்மட்ட வாழ்வின் ஆன்மீகவாதிகள் மற்றும் பகுத்தறிவை ஆராய நேரமில்லாத வறுமை கோட்டிற்கு அருகில் வாழும் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

அவர்களிடம் பகிரப்பட்ட  ஆய்வுகள் இவைதான்.

1. கடவுள் என்பவர் யார் அல்லது எது?

2. உங்களின் கடவுள் எங்கே இருக்கிறார்?

3. நீங்கள் சுட்டும் கடவுள் எதுஎதுவெல்லாம் கொடுக்கமுடிகின்றவர்?

முதலாக கருத்தை பகிர்ந்தவர், பகுத்தறிவு என்று ஆரம்பித்தாலே பகுத்தறிவாளிகளை திட்ட ஆரம்பிக்கும் நபர். அதீத கடவுள் நம்பிக்கையுள்ள ஹிந்து மதத்தை சார்ந்தவர். வடக்குத் தமிழகத்தின் புகழ் பெற்ற அரசியல்வாதி. முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்.
அவரின் முந்தய அறிமுகமே இருந்தாலும்.. இந்த அறிமுகத்தை புதுமுகமாகவே அவருக்கு மீண்டும் அறிமுகமாக்கிக் கொண்டேன்.”வாங்க மறவன். எப்படி இருக்குறீங்க?” என்று ஆரம்பித்தவர் நாம் கடவுள் பற்றிய கட்டுரைக்கான தேவையை சொன்னவுடனேயே ஒருதினுஷாக, விவரிக்க முடியாதபடி ஒரு பார்வையில் பார்த்தார்.. பின்பு மென்மையான புண்ணகையோடு இப்படியாக பேச ஆரம்பித்தார்.
‘ காத்து இருக்குன்னு அத சுவாசிக்கத்தான் முடியும். அத கண்ணுல காட்டுனா எப்படி காட்ட முடியும்?’ பலமுறை கெட்ட சொர்த்தொடரானாலும்.. நமது முதல் கேள்வியை எந்த பகுத்தறிவுமின்றிஅவருடனே ஒன்றி கேட்கலானோம்.
“உங்களை பொறுத்தவரை கடவுள் என்பவர் யார் அல்லது எது?
அவர் சொன்ன பதிலின் விளக்கம் இப்படியாக இருந்தது. நமக்கு நம் பெற்றோர்களை தெரியும். பெற்றோர்களின் பெற்றோர்களையும் தெரியும்.  அவர்களின் பெற்றோர்களையும் தெரியும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்க்கு முந்தைய சந்ததியனரைப் பற்றி துல்லியமாக தெரிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ithil அவர் சொல்ல வந்தது இதுதான். நமக்கு அறியாத அந்த முந்தய சந்ததியினர் நம்மால் அறியப்படவில்லை, பார்க்கப்படவில்லை என்பதற்காக, அப்படியொருவர் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
ஆகவே மக்களால் கடவுளை பார்க்கத்தான் முடியவில்லை எனினும் அறிந்திருக்கிறார்கள்.
இல்லை. பார்க்கத்தான் வேண்டும் என்றால், அவர்கள் நமது முதாதையர்களோடு இராமன், கிருஷ்ணன் போன்ற பெயர்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இதை மறவனும் ஒத்துக்கொள்வர் ( இதில்தான் எனக்கு அதிகமான முரண்பாட்டுக்கருத்துக்கள் உண்டு). அவர்களின் விருப்பம் அதுவாக இருந்தது வாழ்ந்தார்கள். இப்போதான அவர்களின் விருப்பம் அதுவாக இல்லை. அதனால் நமக்கு எந்த தரிசனமும் தராமல் தன்னைத்தேடி வருபவர்களுக்கு மட்டும் ( கோவில்) இல்லை என்று சொல்லாமல் கேட்டதை எல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே கடவுள் எது என்பது கேட்பதே முட்டாள்களின் ஒரு கேள்வியாகவும் அவர் விளக்கினார். அதாவது அவரின் கருத்து சுருக்கமாக, அவரை பொறுத்தவரை கடவுள் என்பவர் எதுவும் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர் ( அனைத்து ஆத்திகத்தின் அறிவற்ற கருத்தைப்போலவே). பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய மற்றும் இதில் அடங்காத  எதனையும் ஆழ்பவர். அவரே உலகத்தின் அரசர் ( பிரபஞ்சம் குறிப்பிடப்படவில்லை. உலகத்திற்கு மட்டுமே கடவுள் சொந்தமானதாக விளக்கப்படுகிறது). அரூபம் உடையவர் ( ஆனால் மானிடப் பிறவியும் எடுப்பார்). அனைவரையும் அவரவர் செய்யும் தண்டனைக்காக காலம் வருகையில் தண்டித்துக்கொண்டிருப்பவர். ( எமலோகம் என்ற ஒன்று அடிக்கடி வேதங்களில் வருவதாக ஞாபகம். அங்கே யாருக்கும் வேலை இருக்காது போல.)

அடுத்த கேள்வி ” உங்களின் கடவுள் எங்கே இருக்கிறார்?
“உனது உயிர் எங்கே இருக்கிறது?” இப்படியான ஒரு கேள்வியை கேட்டு நம்மை மடக்க முயற்சித்தார். கொஞ்சம் சுதாரித்த நான், இப்படியாக பதில் வர ஆரம்பித்தது.
” உயிர் என்பது எந்த ஒரு தனியான இடத்திலும் இருத்திவைக்கப் படவில்லை. அது உடலின் ஒவ்வொரு பாகங்களின் ( இதயம், மூளை, ஈரல்)  இயக்கத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள ஒவ்வொரு செல்லின் இயக்கத்திலும் இருப்பதாக அறிவியலால் நிருபிக்கப்பட்டுள்ளது”
இவ்வாறாக முடிக்கலானேன்
.
கொஞ்சமாக யோசித்த அவர். ” உயிர் எப்படி உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறதோ, அவ்வாறே கடவுளும் உலகின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறார். ( ஒரு இடத்தில்கூட அவர் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்கவோ அல்லது ஆத்திகத்தை விட்டுக்கொடுக்கவோ தயாராக இல்லை). அவர் அங்கே இயங்கவில்லை எனில் இங்கே எதுவும் இயங்க தகுதியற்றதாகிவிடும்.
நான் குறுக்கிட்டேன். ” உடலின் பக்கங்களை ஒரு மனிதனால் எப்போது நினைத்தாலும் கண்டுவிட முடிகிறதே.. ஏன் செல்லின் இயக்கங்களைக்கூட அவனால் வரையறுக்க முடிகின்றதே? “
அதற்க்கு அவரின் விளக்கம் இப்படியாக இருந்தது.” எப்படி ஒரு செல்லினை வரையறுக்கவோ பார்க்கவோ ஒரு நுண்ணோக்கி தேவையோ அது போலதான், கடவுளைக்காணவோ அல்லது உணரவோ ( உணர்வதுதான் கடவுள் என்று நினைவூட்டுகிறார்)  ஆத்திகம் என்ற ஒரு இடைப்பொருள் தேவை.
மீண்டும் குறுக்கிட்டேன். ” அப்பொழுது வேத சாஷ்திரங்கள் சொல்வது போன்ற தேவ லோகம், நாக லோகம், வைகுண்டம், கைலாயம் போன்றவற்றை மறுக்கிறீர்களா?”
” லோகங்கள் என்பது புராணங்களில் தேவர்கள், முனிவர்கள் சென்று தங்கி வந்த லோகங்கள். அதில் கடவுளின் பங்கு இல்லை. வைகுண்டம் கைலாயம் போன்றவை கடவுளின் சுற்றுலாதலங்கள் போன்றவை” ( சமாளிப்பில் அவரை பார்க்க முடிந்தது. கற்பனைகளின் எல்லையை தாண்டிக்கொண்டிருந்தார். சிரிப்புடன் கொஞ்சம் கோபமும் தலைக்கேறியது  )
அவரின் பதில் இதுதான். கடவுள் என்பவர் அரூபமற்ற, அனைத்திலும் நிறைந்தவர். அவர் எங்கும் சென்றுவரவும், எந்த உலகத்தையும் படைக்கவும் அழிக்கவும் ஆற்றல் பெற்றவர்.
அடுத்து, ” நீங்கள் கூறும் கடவுள்கள் எதைஎதையெல்லாம் கொடுக்கவல்லது?”
” ஏதோ கைல நோட் வச்சு எழுதுறிங்க இல்ல? அதுல கொஞ்சம் முன்னாடி படிச்சு பாருங்க.” ( சிரித்துக் கொண்டேன்!)
அவர் முன்னே கூறியபடி, கடவுள் என்பது அனைத்தையும் அழிக்கவும், கொடுக்கவும் வல்ல ஆற்றல் படைத்தது. அதனை தேடி போகும்போது அது நமக்கு விரும்பியவற்றைகொடுக்கும். அது எதுவாக இருந்தாலும் சரி. நம்பிக்கையோடு கேட்டால் நிச்சயம் கிடைக்கும். ( வேலைக்கு போகம மாத மாத சம்பளம்?)
“உங்களின் இந்த வாழ்க்கை நிலைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் அல்லது காரணம் உள்ளதாக நினைக்கிறீர்களா? அப்படியானால் என்ன? “
“வாழ்கை நிலை  என்பது என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கையாலனைப் பொறுத்தவரை, விதி தீர்மானிப்பதாகும். விதி என்பது நாம் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்து கடவுளால் தைக்கப்படுவது ஆகும்!  இதுவே கடவுளின் பங்கு.”
மேலும் அவரைப் பொறுத்தவரை, தான் நிம்மதியான ஒரு சூழ்நிலையில் இருக்க அவர் போன ஜென்மத்தில் செய்த சில நல்ல விசயங்களும், கடவுளின் அனுகூலமும்தான் காரணங்கள். மற்றபடி அவர் உழைப்பதோ, சாப்பிடுவதோ ( மக்களின் பணத்தை அல்ல) அவரின் சொந்த முயற்சி அல்லது சொந்த செயலோ அல்ல. அனைத்தும் கடவுளால் நிர்ணயிக்கப்படுவது.
” போன ஜென்மம் என்றால் என்ன? அது எப்படி சாத்தியம்?”
” இந்த கேள்விக்கும் பதில் நீங்களே சொன்னீங்களே! விஷ்ணு பகவான் ஒரு ஜென்மத்தில் இரமான் ஆகவும், மறு ஜென்மத்தில் கிருஷ்ணனாகவும்.. இது போன்று தொடர்ந்து தசாவதாரங்கள் எடுத்ததே ஜென்மங்களில்தானே. ( ஒ! இப்படி வேற ஒன்னு இருக்கா! )
அதாவது இந்த வினாவுக்கான அவர் பதில், கடவுள் மனித வாழ்கையை ஒவ்வொரு ஜென்மங்களிலும் செய்யும் தவறுகளைப் பொறுத்து அடுத்தடுத்த ஜென்மங்களில் தண்டனை கொடுக்கிறாராம். ஒரு ஆசிரியர் மாணவன் செய்யும் குறும்புகளுக்காக அவர்களை மண்டியிடச் செய்வது போல. ( நல்ல இருக்கே!)
குறுக்கிட்டேன். ” அப்பொழுது எல்லாவற்றிற்கும் முதலாக வந்த ஜென்மம் எதாக இருந்திருக்கும்?”
சிரித்துக்கொண்டே ” தேவர்கள் முனிவர்கள் அரசர்களாகவும் இருக்கலாம்.. ஆனால் அழகான வாழ்வாக இருந்திருக்கும்.” ( ஷப்பா! இப்பவே கண்ணக்கட்டுதே!!)கடமைக்காக கடைசி
கேள்வியையும் கொஞ்சம் திருத்திக் கேட்டேன்.
” நீங்கள் விரும்பும் கடவுளின் அல்லது கடவுளின் ரூபம் என்ன?
” அவர் அரூபம் ஆனவர். இருந்தாலும் அவரை அழைக்கும் ரூபத்தில் பார்க்க முடியும். நான் விரும்பும் உருவ வழிபாடு ______”
(அவரின் விருப்ப உருவ வழிபாடை பதியவில்லை!)
பின்பு ஒரு கப் காப்பியை குடித்து நன்றிகூறி வெளியேறிக் கொண்டேன்.!
வாசல் கதவுகளை தாண்டும்போது ஏதோ ஒரு கிராபிக்ஸ் படம் பார்த்தது போன்று உணர்வு.
ஒன்றுமட்டும் நன்றாகப் புரிந்தது. ஆழமான ஆத்திகவாதிகள் சுயஅறிவுக் கருத்துகளுக்கு தகுந்தாற்போல் பதில்களை தர இயல்கிறதோ இல்லையோ.. அதற்க்கு கொக்கி போடுகின்ற வகையில் நிரூபிக்க முடியாத.. நிருபிப்பது போன்ற போலித்தன்மைகொண்ட கேள்விகளை புணைவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இவரின் உள்மனதின் வார்த்தைகளைக் கொண்டு இவரால் உருவாக்கப்பட்ட கடவுளை இப்படி கண்டறியலாம். இவரின் கடவுள், பிறப்பின் ஆரம்பத்தில் பல குழப்பம் நிறைந்தவர். அவர் வந்த தடம் மறுசீரமைக்கப்பட்டு கால்த்தடம் அழிக்கப்பட்டுவிடப்பட்டது. இவர் குடும்பமும் அதீத ஆத்திக எண்ணம் கொண்டது. இவர் பகுதி 1 ன் படி குடும்ப பழக்க வழக்கங்களால் ஆன்மீகவாதியாக மாற்றப்பட்டவர். வாசலில் கரி மிளகாய் கட்டுவது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் உள்ளவர். இவரின் அழுத்தமான வாழ்க்கை சூழ்நிலையை கடவுள் என்ற மாய பிம்பங்களைக் கொண்டு அமைதியாக்கிக்கொள்கிறார். இவர் போன்றவர்கள் அடிக்கடி கோவில் செல்வது.. மனது அமைதியாக நாம் பூங்கா செல்வது போன்ற சூழ்நிலையே. இவரைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் அமைதியையும் வேண்டும் போது பதவி பணத்தையும் கொடுப்பவர்!
—————————————————————————————————————————————-
வாழ்கையில் நடக்கத் தெரிந்தும் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறோம்!
—————————————————————————————————————————————-
இன்னும் வருவார்கள் அப்பாவிகள்…  அலசுவோம்!

6 thoughts on “கடவுளை கடந்து செல் – பகுதி 2

  1. சகோதரர் மறவன் அவர்களே,

    கடவுளை நாம் நம்பிக்கை என்ற வகையில் அணுகாமல் பகுத்த்தரிவு நோக்கிலேயே அணுகுவோம்.

    புத்தர் தியானம் மனக் குவிப்பு செய்து துன்பத்தை வென்ற நிலையை அடைய வில்லையா? விவேகனந்தர் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று உண்மையை அறியும் எண்ணத்தோடு நேர்மையாக தேடவில்லையா?

    நம்பிக்கை என்று வந்து விட்டால் அவ்வளவுதான்.

    நாம் நம்புகிறோம் என்று சொல்லி விட்டால் அவ்வளவுதான்.

    இதுதான் கடவுள் என்பார்கள். என்னவோ இவர்கள் கடவுளைப் பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல “நான் சாட்சி குடுக்கிறேன்” என்பார்கள்.

    இவர்களே பார்க்காத ஒரு கடவுளை – அந்த ஒரே கடவுள தான் உண்மையானது – என்று நம்மை நம்ப சொல்வார்கள்.

    பிறர் வணங்கும் கடவுள்கள் பொய் , கெட்டவை என சொல்ல சொல்லுவார்கள்!! இப்படியே போனால் மனதில் வெறுப்புக் கருத்துக்கள் அதிகமாகி மோதலும், பூசலும் உண்டாகும்.

    “என் கடவுள் மட்டும் தான் உணமையான கடவுள்” என்று உதார் விடும் பேர்வழிகளிடம், அந்தக் கடவுளைக் காட்டச் சொல்லி, நிரூபிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

    அப்படி அவர்கள் கடவுளைக் காட்ட முடியாவிட்டால், நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் அமைதியாக, பிறர் தெய்வங்களை இழிவு படுத்தாமல், அமைதியாக தன தெய்வங்களை வணங்க வேண்டும், அதுதான் நாகரீகம் என்பதை நாம் எடுத்து சொல்ல வேண்டும்.

    இந்த பணியை செய்ய வேண்டியது நாம் தான். இல்லை என்றால் இந்த நம்பிக்கை கோஷ்டியினர் உலகையே இடுகாடு ஆக்கி விடுவார்கள்.

    சிலுவைப் போர்கள் எனப் படும் குருசெடு போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது.

    நாம் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை. எல்லா மதங்களின் நல்லினக்கத்துக்கே உழைக்கிறோம்.

    • திரிச்சி நண்பருக்கு வணக்கம்
      //சிலுவைப் போர்கள் எனப் படும் குருசெடு போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது. //
      உண்மைதான். உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதுதான். அனைத்திற்கும் மூலமான அந்த ஒன்றே கடவுள் என்ற பெயரால் பலதரப்பட்ட வகையில் பிரித்து அழைக்கப்படுகிறது என்று நான் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கவில்லை. அதன் உள்நோக்கம், அனைவரும் அமைதியான வழியில் ( கற்பனை கடவுள்கள் மற்றும் மதங்களால்ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளாமல் அவரவர் வழியில்) வாழவேண்டும் என்பதே. அதுவும் என்னால் உணரமுடிகிறது. நல்ல நோக்கம். நான் சொல்வதும் எழுதுவதும் அதனை எதிர்த்து அல்ல. என் ஆறறிவு மக்களை மூடநம்பிக்கையின் மூழ்களிலிருந்து வெளிக்கவரவே ஆகும். கருத்தை பகிர்ந்ததிற்கு மிக்க நன்றிகள் நண்பரே.

  2. ச‌கோத‌ர‌ர் வி.பி. ம‌ற‌வ‌னை மிக‌வும் பாராட்டுகிறேன்.

    ஏனெனில் இவ‌ர் க‌ட‌வுள்க‌ளைக் குறித்து கிண்ட‌ல் செய்து பேசி, ”இந்த‌க் க‌ட‌வுள் இப்ப‌டி செய்தானே, அந்த‌க் க‌ட‌வுள் இப்படி செய்தானே”” என்று வெறும‌னே ந‌க்க‌ல் அடிப்ப‌தில் முனைப்பு காட்டி இருந்தால் ந‌ம்பிக்கையாள‌ர்க‌ள் இவ‌ர் மீது ஆத்திர‌ப் ப‌ட்டு இருப்பார்க‌ளே த‌விர‌ இவ‌ர் கேட்க்கும் கேள்விக‌ளில் உள்ள‌ நியாய‌ம் புரிந்து இருக்காது. ‘

    ஆனால் ச‌கோத‌ர‌ர் ம‌றவ‌னோ உண்மையை நோக்கிய‌ ப‌ய‌ண‌த்தில் தெளிவாக‌ இருக்கிறார்.

    வாழ்த்துக்க‌ள்.

    • திரிச்சிக்காரன் அவர்களே! எனது நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தமைக்கும் நன்றிகள். நான் கடவுளை ( நம்பிக்கையை) குற்றம் சாட்டவோ, மதங்களை குற்றம் சாட்டவோ இந்த தலைப்பினை எடுக்கவில்லை. என்னால் முடிந்தவரை, கூடியவர் அனைவரும் கடவுளை ( நம்பிக்கையை) தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றும், மூட நம்பிக்கையில் இருந்து விடு பட வேண்டும் என்றும்தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றிகள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s