சொர்க்கத்தின் வாசலில் ஒருநாள்!

எங்களின்  இந்த உன்னத காதல் பாதையில் முட்களைப் புதைத்து, எங்கள் காதல் மலரை சிதைத்தவர் யார்?

என் பெற்றோரா?அல்ல!

என் உத்தியோகம் அல்ல!!

அவளது பெற்றோரும் அல்ல!!!

ஆரியர்கள் செய்த சதியால் வந்த சாதி… இரண்டெழுத்து வார்த்தை…

எங்கள் இரு மனதையும் சிதற  செய்து விட்ட சாதி !!  என் பாட்டனார் ஒருவர்..சக்கிலி சாதி பெண்ணை மணமுடித்து கொண்டாராம். அந்தக்   கலப்படம் இன்னும் என்னுள் இருக்கிறதாம்!  அவள் பெற்றோர் நானே அறியாத என் பூர்வீகத்தை சொல்கிறார்கள்!! முறையாக பெண் கேட்டு சென்ற என் தந்தையை இன்முகம் காட்டாது புன்முகம் காட்டி விரட்டி அடித்த காட்சி கண்டு மகனாய் இருந்த தகுதியையும் இழந்து விட்டேனே!!

யார் கீழோர் ?? வந்தவரை வரவேற்று உபசரிக்க தெரியாத மூடர்கள்?? இவ்வளவு நடந்தும  எனக்கு உறுதுணையாக பக்கம் நின்றவளின் மௌனம் என்னை இழக்க  செய்தது… உள்ளுக்குளிருந்து எதோ என்னை விட்டு செல்வது போல… ஒரு கணம் புலன்கள் இயங்காத நிலையில் வாடை பிணமானேன்..

நானும்  அவளும் சேர்ந்து நெடுங்காலம் வாழ வேண்டும் என ஏறாத கோவில் இல்லை, தெய்வங்கள் இல்லை!!

நாங்கள் ஒன்று சேர குடுமி வாய்த்த பாசண்டன் சொன்னது போல, நாக தோஷம், மாங்கல்ய தோஷம், என… நாள் தோறும் புற்றுக்கு பாலும் முட்டையும் வைக்க சொன்ன போது தினமும் செய்தேனே!! என் பணத்தை இரைத்தேனே!! சாத்திரங்கள்.. சொல்கின்றன என்று.. சனி தோறும் நவகிரகங்கள் சுற்றினேனே!! அனுஷ்டித்து துதிதேனே! எந்த பெரிய ஆழ மரத்தை பார்த்தாலும் மஞ்சள் நிற கயிற்றைகே கட்டினோமே!! அபயம் வேண்டி உபயம் பல நுறு செய்தேனே!! ஓமங்கள் வளர்த்தேனே!! இவ்வளவுக்கும் ஒரே பதில் தோல்வி!! ராகவி!! என்னை வேரோடு சாய்க்க வந்த அருவி… என்னுள் மருவி.. நின் சிந்தையில் பதிந்த… என் ராகவி… என்னை விட்டு அகன்றாள்.. இயன்ற ஒன்றா அது!! எந்த பாம்பும் உதவிக்கு வரவில்லை… கிரகங்களும் என் தலையெழுத்தை மாற்றவில்லை!! பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள்… கொண்டிருக்கும் அல்ப சமுதாயத்தை முற்றிலும் வெறுத்தேன்! சாதி மக்களின்  பாதி…. ஆரியர் தந்த எச்சிலின் மீதி!! வம் சமுதாயம் மாறபோவதில்லை!!! சாதி கொடுமைகள் இன்னும் நீங்கவில்லை!! நீண்டுவிட்டது!! கொள்ளவந்த கிருமி!! எதனை பெரியாரும்… மகாகவிகளும்.. வாள் எடுத்து நின்றாலும்… இந்த மூடர்கள் மாறபோவதில்லை!! சில சமயம் மனதின் ஆற்றல்.. அறிவைவிட பலமானது!! பலமுடையவனும் பலவீனம் ஆவது இயல்புதான்!! மனதின் ஆதிக்கம் என்னை விழுங்கியது!! எதோ என் மனம் நிம்மதியை நாடியது!! துன்பத்திலிருந்து விடுதலை!! பட்டினத்தார் ….  ஹா ஹா !! உலக வாழ்கையை துறந்தார்!! பரதேசி!! நான் ? சாதாரண மனிதன்!! உலகத்தை விட நினைத்தேன்!! என்முன் கொஞ்சம் நேரம்.. அம்மா!! அப்பா!! என் ராகவி… எல்லாம் தெரிந்தனர்…. நீர் குமிழி போல…. சிறிதும்  …. மெல்லமுமாய் என் கண்களும் மூடின!! ராகவி ராகவி… என்ற அமுதசொல் உச்சரிப்பில் …. மெல்லமாக மௌனத்தில் முடிந்ததுகொண்டிருந்தது!!

என் ஊர்வலம்!!  என்னை சுமக்க நான்கின் இரண்டான எட்டுக்கால்கள் தேவைப்படுகின்றன!! வாழ்வின் வட்டம் புரிகின்றது!!
பூக்கள் நிரம்ப… வழியே சென்றாலும்… என் மலர் வாசனை அவளை சேருமா இனி!! தூரத்தில் ஏதோ ஒரு தேவதை…!! நெற்றி நிறைய திலகம்!! அழகான பட்டுப் புடவைகள் பல சுற்றி இன்னுமே அழகாக தெரியும் ஒருதேவதை!! அசைந்தாடும் குழலில் வண் ண  மலர்கள்..!! யார் இந்த புண்ணியவதி!! என் உடல் அசைவற்று கிடந்தாலும்… காற்றில் மிதக்கும் என்னுயிர் ஏனோ திண்டாடுகிறது!!  அடடா! அவள் என் ராகவி!! பிரிந்த உயிர் மறுமுறை உடல்னுலைய ஏங்குகிறது !! இறந்த பின்னும் கனவு வருமோ.. இல்லை இது உண்மை.. அவள் காத்திருக்கிறாள்.. அங்கு என்னவள் எனக்காக ஏற்க்கனவே காத்திருக்கிறாள்!!
அவள் காதலிதான்.. மனம் வார்த்தைகளின்றி வெட்கிப் போகின்றது.. என்னையும் மிஞ்சி என்னை காதலித்த காதலிதான்.. அவளின் கண்களில் இரு துளி நீர் !! என் வழி தூவின மலரிதழ்களை நனைத்தன!! அவள் சுவாசத்தில் நானும் இனி என் சுவாசத்தில் அவளும், எந்நாளும் இருக்கப் போகின்றோம் எங்களின் அந்த அழகான காதலென்ற வார்த்தையுடன்.. இனி தடுக்கவோ சாதிய தீண்டாமை மூட்டவோ எவருமில்லை.. இருக்க வாய்ப்பும் இல்லை..
எவ்வளவு பெரிய முட்டாள் நான்!! … என்னவளை புரியாமல் காதல் என்ற வார்த்தையை மட்டும் காதலித்திருக்கிறேன்.. காதல் இது தானோ.. இவ்வினாடியில் இருவரும் ஒருவருக்கொருவராய் தோற்றுக்கொண்டிருக்கிறோம்..  என் பயணமாய் முடியும் என்று எதிர்பார்த்த பயணம், எங்களின் பயணமாய் தொடர்ந்தது…..
வழியே. ..ஒரு மஞ்சள் கயிற்றுடன் ஒருவன்… ஆல மரத்தின் அருகில்… “இறைவா!! நானும் என் கயலும் ஒன்னு சேரனும்!!”  மூன்று முறை சுற்றி!! அந்த மரகிளையில் அதை கட்டினான்!! எங்களின் மனதில் மனிதனை நினைத்து எழுந்த சிரிப்பு முடிக்கப் படவேயில்லை என் இறுதி வழியிலும்… என் பிரேதம் எரித்து முடிக்கப்பட்ட வரையிலும்..
இதை காண வேண்டுமா!! என் மனம் அகலிகை போல் கல்லானது!! எத்தனை இராமன் வந்தாலும் மாற்ற முடியாது….. மனித வாழ்க்கை இன்பமானது!! மனிதவாழ்கை என்ற துன்பத்திலிருந்து விடுதலை  பெற்றவனுக்கு!! …

https://i2.wp.com/i57.photobucket.com/albums/g231/meilandra/MySpace/Angels%20and%20Faeries/Angels_in_love_by_Orrik.jpg

நானும் என் ராகவியும்,  இனி மதமில்லா இனமில்லா  ஜாதியில்லா ஒரு இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.. அது சொர்க்கமாக இல்லாவிடிலும்.. அதன் வாசலாக இருக்கலாம்..

எங்களின் காதல் இங்கு தொடங்குகிறது மீண்டும்..
————————————————————
சாத்திரமின்றேர் சாதியில்லை
பொய்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்மையாகி புழுவென மடிவர்!
————————————————————-
– முற்றும்..

Posted in வகைப்படுத்தப்படாதது.