எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!
என்னுடல் வளர்க்க
உன்னுடல் இம்சித்தாய்..
அன்னையே !
ஈரைந்து மதங்கள்
என் கருவையே சுவாசித்தாய்..
உன் வம்சம் என்னையே
உலகுக்கு ஈன்றெடுததாய்..
வெளி சொல்இயலா வழியிலே
உன்னையே ஒப்புக்கொடுத்தாய்..
என் பிண்டம் வளரவே
உன் மார்பில் இடம் கொடுத்தாய்..
எத்தனை நாளாய் நீ
இரவும் பகலும் விழித்திருந்தாய்!
உன்கைகள் ஓடியவே
தொட்டிலதை தாலாட்டி,
உன் செவ்வாய் இதழ்வழிக்க
இராகங்கள் நீ பாடி,
எத்தனை கடமையிலும்
என்மீது கண்வைத்து,
ஏதேனும் அருந்தும்முன்
ஒருமுறை நீ சுவைத்து,
ஏதேனும் யாராலும்
இடித்தாலும் கடிந்தாலும்
என்கண்கள் நீர்வழிய
உன் தோல்கள் இடம்கொடுத்து..
என்றுமே எனக்காக
நீ இருந்தாய் என்அன்னையே!
என்முதல் தவரலில்
ஓடிவந்து கட்டி அனைத்து,
என்கால்கள் எட்டுவைக்க
உன்முத்தம் தொட்டுவைத்து,
என்வாய் மொழியுரைக்க
உன்வாய் உச்சிமுகர்ந்து,
எத்தனை சந்தோசம்
என்அன்னையே உன்முகமதனில்!
என்பள்ளிப்பாடமதில்
என்றுமே பின்னேற்றம்..
என்கல்லூரி நாட்களிலும்
ஏதோ ஒரு திண்டாட்டம்..
என் வாழ்வின் தொடக்கத்தில்
அன்றுமாய் கலியாட்டம்!
அத்தனைக்கும் புன்னகைத்து
எனக்கேதெரியாமல்
முழுதுமாய் தோல்கொடுத்து,
என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே..
எப்படி மறப்பேன்
ஒருநொடியிலும் நின்னையே!!!
எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!

வணக்கம் மறவனுக்கு.
என்தாயை துதிக்க எனக்கு எதற்கு ஒருநாள்
என்று மிகவும் அழகாக கேட்டீர்கள் நன்றி அருமையிலும் அருமை
ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு நிலையம்
இருக்கிறதா இல்லையா என்று பார்பதற்கு பொருந்தும்
நமக்கு வேண்டாம் என்றதுபோல் அமைத்தீர்கள் அருமை .
good..very very good mr.maaravan.
தளம் வந்ததிற்கு மிக்க நன்றிகள். அம்மா!
///என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே..
எப்படி மறப்பேன்
ஒருநொடியிலும் நின்னையே!!!
எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!///
திரு மறவன் அவர்களே,
அருமையான கவிதை,அருமையான வரிகள்.இந்த அன்னையர் தினமெல்லாம் மேலைநாட்டு கலாச்சாரமே,அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை போற்றுவது சரியல்ல.மேலைநாடுகளில் ஒரு வயதுடைய குழந்தையைக் கூட தனி அறையில் தூங்கவைத்து, தாயும்,தந்தையும் வேறு அறையில் தூங்குவார்கள்.எல்லாம் ஆங்கிலப் படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டது தான்.மேலும் பல தாய் தந்தையர்கள் ஒன்றாக வாழாமல், விவாகரத்து பெற்று வெவ்வேறு துணையுடன் வாழ்வதால் , குழந்தைகள் தன் உண்மை தாயுடனோ, தந்தையுடனோ இல்லாத காரணத்தாலேயே ,அன்னையர் தினத்தில் தன தாயின் இருப்பிடம் சென்று அவர்களைப் போற்றுகின்றனர்.அதே போல் தன் தந்தையை வேறு நாளில் -தந்தையர் தினத்தில் -அவரின் இருப்பிடம் சென்று போற்றுகின்றனர்.அவர்கள் அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று தனித் தனியாகத்தான் கொண்டாடுகின்றனர்.அன்னையர் தினம், தந்தையர் தினத்தை பல நூற்றாண்டுகளாக கொண்டாடிவந்த மேலை நாட்டினர், பெற்றோர் தினத்தை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அன்னையர் தினம், தந்தையர் தினத்தை பல நூற்றாண்டுகளாக கொண்டாடிவந்த மேலை நாட்டினர், பெற்றோர் தினத்தை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கொண்டாடத் துவங்கியுள்ளனர்.
அருமையான ஒரு வரலாற்று செய்தியுடன் கூடிய அழகான கருத்து. உண்மைதான் தனபால் சகோதரரே! என்னை பொறுத்தவரை உண்மையான ஈடுபாடு உள்ளவரை எதற்கும் தனியான ஒரு தினம் கொண்டாட தேவை இல்லை! உங்களின் கருத்தன் நான் அமோதிக்கிறேன். நன்றிகள்!
எவ்வளவு சிறப்பான கவிதை! யோசித்து தன் அனுபவத்தையே வார்த்தைகளில் எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
அன்னை என்கிற வார்த்தையின் பரிமாணத்தை எவ்வளவு விளக்கினாலும், முழுதாக விளக்க முடியாத அளவுக்கு சுயநலமற்ற அன்பின் அடையாளமாக விளங்குகிறாள் அன்னை. ஆண்டவன் தன் படைத்த எல்லா உயிரையும் தானே பார்த்துக் கொள்ள முடியாதுன்னுதான் தாயைப் படைத்தான், என்று ராஜ் கிரண் சினிமாவில் ஒரு வசனம் வரும். கடவுள் இருக்கிறாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் அன்னையின் அன்பை நேரில் பார்த்து விட்டோம். பெரும்பாலான இந்தியனுக்கு தாயும் கடவுளே.
அன்னையர் தினம் என்று தனியாக இருப்பது எதற்க்காக என்று தெரியவில்லை. அன்னையை நினைக்காதவர் அன்று ஒரு நாளாவது அன்னையை நினைப்போமே என்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை.
அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரி தினம், காதலர் தினம் …. இவை எல்லாம் வாழ்த்து அட்டை வியாபாரத்துக்கும், பூங்கொத்து வியாபாரத்துக்கும் உதவும். இப்படி ஊதாரி செலவு செய்தே அமெரிக்கன் உலக பொருளாதரத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டான். என்னிடம் அன்னையைப் பற்றிக் கவிதை ஒன்று கேட்டால் வெறுமனே அம்மா என்று மட்டும் எழுதிக் கொடுத்து விடுவேன். அதற்க்கு மேல் எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை. உணர்ச்சிகள் மாத்திரமே உள்ளது.
அன்பு சகோதரர் வி.பி. மறவன் தாயின் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கவிதை வெளியிட்டதற்கு பாரட்டுதல்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழத்தை இரசித்து பொருத்தமான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர் அவர்களே!!