மனிதநேயம்.. வாழ்ந்துகொண்டிருக்கிறது.
மேலோட்டமா பார்த்த இது ஒரு சாதாரண செய்தி. அவ்ளோதான்.. எல்லோரும் அடுத்து அவங்கவங்க வேலைய பார்த்துட்டு போய்டலாம். இப்படிதான் வாழ்ந்திட்டு இருக்கு மனிதநேயம்னு தனியா கட்டுரைபோட்டு நமக்கு விளக்கவேண்டிய தேவை இல்ல. நாம்தான் பாக்கறோமே! தினம் தினம் ரோட்டோரத்தில, கோவில் வாசல்ல, bus stand லனு..
நம்மல்ல எத்தனைபேர் அவங்க பக்கத்துல உட்கார்ந்து உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்ருபோம்? இல்ல, அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு, ஏன் இவங்க இப்படி மனிதம் கொல்லப்பட்ட நிலையில இருக்காங்கனு ஒரு நிமிஷம் யோசிச்சு பார்க்கிறோமா?
“கீழ பணம் கிடந்த எடுப்பீங்களா?” னு இந்தியால ஒரு பெரிய்ய்யய.. VIP கிட்ட கேக்க அவர் சொல்றாரு, குனிஞ்சு எடுக்கற time ல நான் பலகோடி சம்பதிசிடுவேன்னு.. அவர் இதுவரைக்கும் சம்பாதிச்ச மக்கள் பணம் பத்தாது போல.. இதுபோல மனிதம், மனிதநேயம் பத்தி பேசும்போது மட்டும் ஏன் அறிவுபூர்வமான பதில்கள் வர்றது இல்ல? இவங்க மனசுல பணத்தை தவிர வேற இருந்தாதான வரும்.
இந்த வீடியோல மனச கிழித்துப்போட்ட விஷயம்.. மனிதநேயத்தைபற்றி வாய்கிழிய பேசும் இந்த மீடியவுக்காக படம்பிடிச்சவர், அவர்கூட இருந்த assistants இவங்க எல்லாம் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க? ஓ! அவங்க channel ratings காக பாடுபட்டுட்டு இருந்திருப்பாங்க இல்ல.
மனிதன் அறிவியலிலும், பொருளாதார வளர்ச்சியிலும் எவ்வளவு சாதனை படைக்கிறான்னு, மனிதர்களுக்கு மீறிய அறிவும், விஞ்ஞானமும் எந்த species or alien கிட்டயும் இல்லன்னு மார்தட்டும் ஞானிகள், அறிவு ஜீவிகளுக்கெல்லாம் ஏன் மனிதம் கண்ணிலேயே தெரியமட்டேன்னு மறஞ்சு போயிடுது? ஏன் மனிதநேயத்தைமட்டும் காத்துல பறக்க விடறாங்க?
மனிதநேயம்னு ஒன்னு மனசுக்குள்ள இருந்தா மட்டும்தான மனிதன் மனிதனா இருக்கிறான்னு சொல்ல முடியும்.
இங்க மனிதநேயம்னா என்னனு பல பேருக்கு அர்த்தமே தெரியாம இருக்கும்போது எங்க மனிதமும் மனிதநேயமும் உயிரோட வாழும்? குப்பைமேட்டில்தான் கிடக்கும்.
இதுல மனிதனுக்கு இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்றுவேற முக்கியமா போயிட்டு இருக்கு.
ஈழத்துமக்கள கொன்னு குவிச்ச ராஜபக்ஷேவுக்கு எதிரா தமிழ்நடிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினப்ப, தன் கையெழுத்த பதிய மறுத்த நடிகர் திரு.விஜய் திருமகனுக்கு “உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா” னு பாட்டு எதுக்கு.. மனிதநேயத்தை பறைசாற்றவா? அவர ஏன் திட்டனும்?
நாம.. ? ஈழத்துல தமிழ் மக்கள் கொல்லப்படும்போது மனசுல கொதிச்ச அந்த வெறி, இன உணர்வு எல்லாம் பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் நடந்துட்டு இருக்கும்போது எங்க போச்சு எல்லோருக்கும்?
அமெரிக்கா, ஈராக்-ல மக்களை கொன்று குவிக்கும்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இங்க இருக்க அமைப்புகள் ஏன் போராட்டம் நடத்தாம விட்டாங்க? அப்போ இந்த சினிமா நடிகர் நடிகர்களுக்கெல்லாம் கண்ணு தெரியாம, காது கேக்காம போச்சா? அப்போ ஏன் உண்ணாவிரதத்தை அந்த மக்களுக்காக, குழந்தைகளுக்காக நாம் முன்னெடுக்கல?
எங்கயோ ஒருநாடு. ஏதோ ஒரு இன மக்கள்ன்னு நமக்கே தெரியாத ஒரு இன உணர்வு .. ரொம்ப நல்ல உணர்வு.
மனிதன் எதிர்காலத்தில் எப்படி மனிதனா இருக்கபோறான்??????!!!!!!
vanakkam rooban. realy nice about ur attitd.