‘தன்னல’ தலைவர் அண்ணா ஹாசரே!

News: அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை

/டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

பிகாரைச் சேர்ந்த தினேஷ் குமார் யாதவ், டெல்லி ராஜ்காட்டில் 80 சதவீத தீக்காயங்களுடன் கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவருக்கு மனைவி, 5 குழந்தைகள், மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். டெல்லியில் வாட்ச் மெக்கானிக்காக தினேஷ் வேலைபார்த்து வந்தார்.

ராம்லீலா மைதானத்தில் போலீசார்-ஹசாரே ஆதரவாளர்கள் மோதல்:

இந் நிலையில் ஹசாரே கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் அங்கு பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3 மணியளவில் ராம்லீலா மைதானத்தின் விஐபி நுழைவாயில் கதவுகளை அந்த இளைஞர்கள் திறக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை உள்ளே விட மறுக்கவே, அவர்களைத் தாக்கினர்.

இதையடுத்து விரைந்து வந்த கூடுதல் போலீசார் அவர்களை ஒடுக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந் நிலையில் அந்த வாலிபர்கள் அன்னாவின் ஆதரவாளர்கள் இல்லை என்றும், கலாட்டா செய்ய வந்த கும்பல் என்றும், ஆனால், அவர்களை ஹசாரே ஆதரவாளர்கள் என்று கூறி போலீசார் திசை திருப்ப முயல்வதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார்.

ஹசாரே கைது விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:

இதற்கிடையே ஆகஸ்ட் 16ம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஹசாரே கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஹசாரேவின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில்சிபல் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று அவர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. /

vaikaitamil.wordpress.com

ஹசாரே நடத்தும் ‘அமைதி’ போராட்டத்தில், தீக்குளித்து உயிரிழந்த ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட்டுவிட்டு, அவர் கலவர பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்கைகளை பேசவைப்பது அவரின்  ‘போராட்ட வீரியத்தைதான்’ காட்டுகிறது.

இறந்த பீகாரை சேர்ந்தவருக்கு மனைவி, 5 குழந்தைகள், மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர் மற்றும் அவர் ஒரு வாட்ச் மெக்கானிக் என்பது அவரின் குடும்ப வறுமையை மேம்போக்காக காட்டுகிறது. எல்லாம் மீடியாக்கள் கைகளில்தான் உள்ளது.

மீடியாக்கள் அடையாளம் காட்டியபடி அவர் ஒருவேளை ஹசரேவுக்காக தீக்குளிந்து உயிரிழந்திருந்தால் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவ்வளவுதான் என்பது வேதனையான விஷயம்.

ஒருவன் உணர்வுரீதியாக ஒரு விசயத்தில் தீவிரஈடுபாடு கட்டும்போது இதுபோன்று கலவரம் வெடிப்பது இயல்புதான்.. அதனை, கடந்த சில மாதங்களாக மட்டுமே ஊழலை கண்டுகொண்ட ‘பி ஜெ பி ‘ அதரவுகொண்ட அண்ணா ஹசாரே போல ‘பெரும் பெரும்‘ தலைவர்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டு அமைதிப்படுத்துவதுதான் பொறுப்பான முறை.

அதனைவிடுத்து “அவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்னு..” காமடியன் show ஓட்றத போல, அவர்கள் எங்க ஆதரவாளர்கள் இல்லனு நழுவினா.. இவர் ஆதரவாளர்கள்னு உணர்வான இளைஞர்களை தவிர்த்து யாரை  சொல்றருனு புரியல. (இளைஞர்கள் இல்லாம ஒருநாள்கூட இவர்னால போராட்டம் நடத்தமுடியாதுனு இப்படி நம்ம தலைக்கு தெரியாம போச்சு!)

ஒருவேளை ‘பி ஜெ பி’ & ‘ஆர் எஸ் எஸ்’ தொண்டர்களை சொல்வாரோ.?
இதுபோல விசயங்களில் மாட்டிக்கொள்ளகூடது என்று ஹசாரேவும் அவரின் ‘கைகளும்’ நழுவி ஓடும்போதே இந்த போராட்டம் அண்ணா ஹசாரேவால் நடத்தப்படவில்லை. ஒரு பெரிய ‘பின்புலத்தின்’ இயக்கத்தில் நாட்டுமக்களின் ஆதரவை நம்பியும், ஹசாரே ‘ஆதரவாளர்களை‘ நம்பியும் நடத்தப்படுவது புரிகிறது!

எப்படியோ! எல்லா கட்சித்தலைவர்களும், பெரியவாக்களும் ஊழலை கண்டும் காணாம, தான் சம்பதிக்கறதுலையே குறியா இருக்கும்போது.. அரசியல் ஆதாயமோ, இல்லை மக்கள் சேவையோ.. இந்த ‘பெரும்தலை’வராவது போராட்டத்தை முன்னேடுக்கத்துணிந்தாரே..! நல்லது நடந்தால் சரிதான்.